OTT Release: ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. ஓடிடி பக்கம் திரும்பிய ஜெயிலர் பீவர்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.

அட்லீ இயக்கத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா மற்றும் தீபிகா படுகோன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வரும் ஜவான் திரைப்படத்தை தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், OTTயில் அதற்கு போட்டியாக பல படங்கள் வெளியாக உள்ளது. அவை என்னென்ன படங்கள் என்று பார்க்கலாம்.

Upcoming OTT Release This Week Tamil Movies septermber second week 2023

ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவானது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ஜெயிலர் படம் வெளியாக உள்ளது.

பாபா பிளாக் ஷீப்: ராஜ்மோகன் இயக்கிய நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ளது பாபா பிளாக் ஷீப். இதில், ஆர்.ஜே.விக்னேஷ், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் பேனரில் ராகுல் தயாரித்துள்ள, இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி ஒலிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் தற்போது காணலாம்

Upcoming OTT Release This Week Tamil Movies septermber second week 2023

காலா (மலையாளம்): டோவினோ தாமஸ் நடித்துள்ள மலையாளத் திரைப்டமான காலா படம் தியேட்டரில் கணிசமான வசூலை அள்ளியது. இப்படத்தில், டோவினோ தாமஸ், சுமேஷ் மூர், லால், திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்துள்ளனர். உளவியல் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தை செப்டம்பர் 15ந் தேதியில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

Insidious Chapter 3(Engish): டெர்மட் முல்ரோனி, ஸ்டெபானி ஸ்காட், அங்கஸ் சாம்ப்சன், வான்னல், லின் ஷே நடிப்பில் உருவான Insidious Chapter 3 என்ற ஆங்கில திரைப்படத்தை இன்று முதல் Netflixல் பார்க்கலாம். திகிலூட்டும் அமானுஷ்யம் நிறைந்த உலகத்தை படம் மிரட்டலுடன் விவரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X