Modern Love Chennai: கேன்சர் குச்சிகள்.. நினைவோ ஒரு பறவை படத்தில் இவ்ளோ ரகசியங்கள் இருக்கா?
சென்னை: ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள 6வது கதை தான் நினைவோ ஒரு பறவை.
அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி உள்ள மாடர்ன் லவ் சென்னை பற்றித் தான் சோஷியல் மீடியாவில் ஒரே பேச்சாக எழுந்துள்ளது.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா படுக்கையறை காட்சிகளில் ஹாட்ரிக் அடித்ததை போல தனது முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் ஏகப்பட்ட ரகசியங்களை உள்ளே புதைத்து வைத்திருக்கிறார். சமூக வலைதளத்தில் ஒவ்வொரு ரசிகர்களும் அதனை தோண்டி எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
கேன்சர் குச்சிகள்: பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டரண்டினோ தனது படத்தில் ரெட் ஆப்பிள்ஸ் என பிரத்யேக பிராண்ட் சிகரெட் பெயரை வைத்தது போல இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நினைவோ ஒரு பறவை கதையில் கலவிக்கு பிறகு நாயகியும் நாயகனும் புகைக்கும் சிகரெட்டுக்கு கேன்சர் குச்சிகள் என பெயர் வைத்துள்ளார்.

சில புகை ரசிகர்கள் இது போன்ற பிராண்ட் உண்மையாகவே இருக்கிறதா என கூகுள் செய்து ஏமாந்து விட்டோம் என புலம்பியபடி பதிவிட்டு வருகின்றனர்.
எல்லாமே மாயை: கே கதாபாத்திரம் கடைசியாக அவளை விட்டு பிரிந்து செல்லும் போது ஏற்படும் விபத்தில் உயிரிழந்து விடுகிறான் என்றும் அவனுக்கு ஞாபக மறதி ஆகிவிட்டது. அவனுக்கு எல்லாவற்றையும் நினைவுப்படுத்தி அவனுடன் ஒன்றாக சேர்வது போல நினைப்பது எல்லாமே வாமிகா காபியின் இலுஷன்ஸ் தான் என்றும் ஒருமுறை பார்த்தால் எல்லாம் அந்த கதை புரியாது.
ஒவ்வொரு முறை பார்க்கும் போது புதிய புதிய விஷயங்களும் ரகசியங்களும் வெளிவரும் அளவுக்கு பயங்கர இன்டெலக்சுவலாக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

கள்ளிச்செடி: அந்த கள்ளிச்செடி இடம்பெறும் காட்சிகள் எல்லாமே கதையில் இலுஷன் என்றும் அது இல்லாமல் வரும் காட்சிகள் தான் ரியல் என்றும் கே எழுதிய அந்த கதையிலும் கள்ளிச்செடியை வரைந்து வைத்திருக்கிறார் என நினைவோ ஒரு பறவை கதையில் புதைந்து கிடக்கும் பல விஷயங்களை ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர்.

மற்ற 5 கதைகளை விட நினைவோ ஒரு பறவை வேறலெவல் மேக்கிங் மற்றும் வித்தியாசமான மாடர்ன் லவ் ஸ்டோரி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா அடிக்கடி படம் பண்ண வேண்டும் என்றும் சீக்கிரமே ஒரு பெரிய படத்தை கொடுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











