This Week OTT: தியேட்டர் ரிலீஸுக்கு சவால் விடும் ஓடிடி.. இந்த வார ரிலீஸ் விபரம்
சென்னை: இணையம் வளர்ந்த பின்னர், மக்கள் மத்தியில் சினிமா பார்க்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக, படத்தை தியேட்டரில் பார்ப்பதைவிடவும், ஓடிடி தளங்களில் படத்தை பார்க்கும் ரசிகர்களும் நாளுக்கு நாள் கணிசமான அளவு உயர்ந்து கொண்டுதான் உள்ளனர். இவர்களுக்கு தீனிபோடவும், இவர்களை மைய்யப்படுத்தி வியாபாரம் செய்யவும், உலகம் முழுவதும் உள்ள சினிமா உலகங்கள், வார வாரம் ஓடிடி தளங்களில், படங்கள், இணையத் தொடர்கள், ஆவணப்படங்கள் என பலவற்றை, வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள படங்கள், இணையத் தொடர்கள் குறித்த விபரத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.

சினிமா உலகங்கள் நாளுக்கு நாளுக்கு மிகவும் போட்டி வாய்ந்ததாகவும், நூற்றுக்கணக்கான கோடிகள் புழங்கும் அளவுக்கான வணிகம் நடைபெறும் இடமாகவும் மாறிவருகின்றது. நாளுக்கு நாள் அதிகமாகும் தியேட்டர் கட்டணங்களைப் பார்த்து, சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தெலங்கானா, ஆந்திரா, மகாராஸ்ட்ரா போன்ற மாநிலங்களில் ஒரு பெரிய பட்ஜெட் படம் ரிலீஸ் ஆகும்போதும் படத்தின் காட்சிக்கு ஏற்ற வகையில் ஆயிரக்கணக்கில் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்துவதெல்லாம் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில், ஓடிடி தளங்களின் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து விடுகின்றது.
இந்நிலையில், இந்த வாரம் அதாவது இன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள படங்கள் மற்றும், இணைய தொடர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. குறிப்பாக படங்கள், ஆவணப் படங்கள், இணையத் தொடர்கள் மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றைப் பார்த்து, முதலில் எந்தப் படத்தைப் பார்க்க போகின்றீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இந்த வார ஓடிடி ரிலீஸ் விபரம்:
Zebra (Tl) - Aha
Mura (M) - Prime
Nirangal Moondru (T) - Aha
Girls Will Be Girls (H) - Prime
Saamaniyan (T) - Tentkotta
Leela Vinodam (Tl) - Etv Win
Mana Man (Thai) - Netflix
Saptha Kandam (M) - Saina Play
Pallotty 90sKids (M) - Manorama Max
Twisters (E) - Jio Cinema
Ferry2 (Dutch) - Netflix
Kadakan (M) - Sun Nxt
Dear Santa (E) - Prime
Beast Games (E) - Prime Series
Saturday Night (E) - Prime
YoYo Honey Singh (H) - Netflix Docu
Umjolo Day Ones (E) - Netflix
Laid (E) - Jio Series
The Forge (E) - Netflix
Ferry2 (Dutch) - Netflix
Moonwalk (H) - Jio Series
Thelma (E) - Jio Cinema
Six Triple Eight (E) - Netflix
Dilan 1983 (Indonesian) - Netflix
Boy Kills World (E) - Lions gate Play
The Cubicles S4 (T) - Sony Liv Series
Where The Crawdads Sing (E) - Prime


Click it and Unblock the Notifications











