This Week OTT: ஒரே நேரத்தில் களமிறங்கும் தனுஷ் - விஜயகாந்த் மகன்..ஓடிடியில் இந்த வார வரவுகள்!

சென்னை: வார வாரம் புதுப் படங்கள், புது வெப் சீரிஸ்கள், டாக்குமெண்டரிகள், சர்வதேச அங்கீரத்தை பெற்ற படங்கள், அரசியல் பாடம் எடுக்கும் படங்கள், அனிமேஷன் படங்கள் என பல வகைகளில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிக் கொண்டே உள்ளது. கொரோனா காலத்திற்குப் பின்னர் ஓடிடிக்கு இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகள் முழுக்க கிடைத்த வரவேற்பு, இன்றைக்கு பல மில்லியன் டாலர்கள் புழங்கும் தளங்களாக உள்ளன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி ரிலீஸ் ஆன தனுஷின் குபேரா படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூபாய் 150 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த படம் அமேசான் பிரைமில் நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அதேபோல் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான டி.என்.ஏ படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் நாளை முதல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

This Week July 18 OTT New Release Details Kubera Padaithalaivan Sattamum Needhiyum
Photo Credit:

அதேபோல் டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் படம் நாளை முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. தியேட்டரில் இந்த படத்திற்கு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்திருப்பதைப் போல ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் இந்த காட்சிக்காகவே தியேட்டருக்குச் சென்றார்கள். மேலும், படம் ஓடிடி தளத்தில் வெளியான பின்னர் இணையத்தில் கேப்டனின் காட்சிகள் டிரெண்ட் ஆவது உறுதி. ஜீ5 ஓடிடி தளத்தில் நடிகர் சரவணன் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

This Week July 18 OTT New Release Details Kubera Padaithalaivan Sattamum Needhiyum
Photo Credit:

அதேபோல் இந்த வாரத்தில் பல்வேறு ஓடிடி தளங்களில் பல மொழிகளில் படங்களும் வெப் சீரீஸ்களும் வெளியாகவுள்ளது. அதன் விபரம் இதோ.,

This Week OTT Release - July 18:

DNA (T) - Hotstar
Kuberaa (Tl) - Prime
Manidhargal (T) - Aha
Bhairavam (Tl) - Zee5
The Bhootnii (H) - Zee5
Asthra (M) - ManoramaMax
Padaithalaivan (T) - Tentkotta
Special OPS S2 (H) - Hotstar Series
Sattamum Needhiyum (T) - Zee5 Series
Strange New Worlds (E) -Hotstar
Wall To Wall (Korean) - Netflix
Trigger (E) - Netflix
Untamed (E) - Netflix
Riff Raff (E) - Prime
The Cursed (E) - Netflix
The Amateur (E) - Hulu
The Assessment (E) - Netflix
Almost Family (Spanish) - Netflix
Delirium (Spanish) - Netflix Series
Coyotl (Spanish) - Hotstar Series
Rematch (E) - Lionsgate Play Series
Take Point (Korean) - Lionsgate Play
Amy BradleyIs Missing S1 - Netflix Series
Juegos De Seducction (Spanish) - Prime
Trainwreck Balloon Boy (E) - Netflix Docu
Fights Break Sphere (Chinese) - Prime Series
The Idaho Student Murders (E) - Hotstar Docu

More from Filmibeat

Read more about: vijayakanth zee5 netflix ott dhanush
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X