This week ott release : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் இது தான்!

சென்னை : ஆங்கிலம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என பலத்திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளன.

பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடனின் நடித்த சிட்டாடல், தசரா, பத்து தலை ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடிய பிறகு தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளன.

இதில்,இந்த வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

This week movies and web series will be coming out on OTT platforms

பத்து தல : இயக்குநர் ஓபேலி என். கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் பத்து தல. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

This week movies and web series will be coming out on OTT platforms

தசரா : நானி நடித்த பான் இந்தியா திரைப்படம் தசரா மார்ச் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை அள்ளியது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கில் 100 கோடியை தாண்டிய இப்படம் 120 கோடியை நெருங்கியுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

AKA திரைப்படத்தை மோர்கன் எஸ். டாலிபர்ட் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான லாஸ்ட் புல்லட் படத்தை இயக்கி உள்ளார். காவல் துறையின் மெக்கானிக்காக வேலை செய்யும் ஹீரோ கொலை வழக்கு ஒன்றில் சிக்கிக்கொள்ள அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாகும். இதில், லெனோயர், நிக்கோலஸ் டுவாச்சேல் மற்றும் ராம்ஸி பேடியா ஆகியோர் நடித்துள்ளனர். AKA திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் 28ந் தேதி வெளியாக உள்ளது.

This week movies and web series will be coming out on OTT platforms

சிட்டாடல் : ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் புதிய வெப்சீரிஸ் 'சிட்டாடல்' ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பான் இந்தியா முறையில் இத்தொடர் வெளியாகிறது.

This week movies and web series will be coming out on OTT platforms

டிஸ்னியில் : பீட்டர் பான் & வெண்டி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஏப்ரல் 28ந் தேதி முதல் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் ஜூட் லா, அலெக்சாண்டர் மோலோனி, எவர் ஆண்டர்சன் மற்றும் யாரா ஷாஹிடி, பலர். பீட்ஸ் டிராகன், மற்றும் தி க்ரீன் நைட் படங்களை இயக்கிய டேவிட் லோவரி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை, ஆடம் போர்பா, தாமஸ் எம். ஹம்மல் மற்றும் டோபி ஹால்ப்ரூக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X