தியேட்டர், ஓடிடியில் இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?..முழு லிஸ்ட் இதோ!
சென்னை : திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத சினிமா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ஓடிடி தளங்கள்.
வேலை பளுவால் திரையரங்கு சென்று படம் பார்க்க முடியாதவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் ஜாலியாக குடும்பத்துடன் படம் பார்த்துக்கொள்ளலாம். தியேட்டரை விட இதற்கு ஆகும் செலவும் குறைவுதான் என்பதால் பலர் ஓடிடியில் வெளிவரும் படத்தை பார்க்கவே விரும்புகின்றனர்.
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் என்னென்ன புதுப் படங்கள் வெளியாகின்றன என்பதை பார்ப்போம். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், எந்தெந்த வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

கலகத் தலைவன்
தடையற தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி கலகத் தலைவன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில், உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், கலையரன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 18ந் தேதியான இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

நான் மிருகமாய் மாற
இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் நான் மிருகமாய் மாற. இந் படத்தில் நடிகை ஹரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

செஞ்சி
வழக்கமான சினிமா பாணியில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையாக உருவாகி உள்ள திரைப்படம் தான் செஞ்சி. இப்படத்தை தயாரிப்பாளரும், இயக்குநருமான கணேஷ் சந்திரசேகர், தனது ஏலியன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படமும் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

யூகி
ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில், கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்ஷ்மி, இணைந்து நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் யூகி. வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக படம் உருவாகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

த்ரிஷ்யம் 2 ( இந்தி)
ஜித்து ஜோசப் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியாக வெற்றியை பெற்ற திரைப்படம் த்ரிஷ்யம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷ்யம் 2 இரண்டாவது பாகமும் வெளியாகி ஹிட்டடித்தது. இதையடுத்து த்ரிஷ்யம் 2 இந்தி ரிமேக் இன்று வெளியாகி உள்ளது. இதில், அஜய் தேவ்கன், தபு, அக்ஷய் கன்னா, இனிதா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

விவாஹ ஆவாஹனம் (மலையாளம்)
சாஜன் ஆலும்மூட்டில் இயக்கி உள்ளத் திரைப்படம் விவாஹ ஆவாஹனம். இப்படத்தில், அஜு வர்கீஸ், சந்தோஷ் கீழத்தூர், சுதி கொப்பா, ராஜீவ் பிள்ளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சாஜன் ஆலும்மூட்டில் மற்றும் மிதுன் ஆர் சந்த் ஆகியோர் தயாரித்துள்ளனர். மலையாளத் திரைப்படமான இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

அனல் மேலே பனித்துளி
நடிகை ஆண்ட்ரியா அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பாலியல் பலாத்காரம் செயப்பட்டு அவதியுறுக்கு ஆளாகும் பெண்ணாக ஆண்ட்ரியா இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று வெளியாகி உள்ளது.

ஒண்டர் உமன்
பார்வதி, நித்யா மேனன், நதியா, பத்மபிரியா உள்ளிட்டோர் நடிப்பில் ஒண்டர் உமன் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை அஞ்சலி மேனன் இயக்கி இருக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைத்து இருக்கிறார்.

காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம் வரும் நவம்பர் 24-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

சர்தார்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படம் இன்று ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

காட் ஃபாதர்
நடிகை நயன்தாரா நடிப்பில்... சமீபத்தில் வெளியான திரைப்படம் காட் ஃபாதர் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் நேற்று வெளியானது.


Click it and Unblock the Notifications











