இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்… அட.. அந்த படமும் ரிலீஸாகுதா?

சென்னை : திரையரங்குகளில் மட்டுமே படம் பார்த்து பழகிப்போன நமக்கு, ஓர் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தன ஓடிடி தளங்கள். கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதை ஓடிடி தளங்கள் நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டன.

கடந்த இரண்டு வருடங்களில் ஓடிடி தளங்கள் தழைத்து இந்திய சந்தையில் ஆழமாக வேரூன்றி உள்ளன.டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, சோனிலிவ், ஆஹா, ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், ஜீ5 போன்ற சர்வதேச ஓடிடி தளங்களின் முக்கிய சந்தையாக இந்தியா பார்க்கப்படுகிறது.

ஓடிடி தளத்தில் வரவால் மக்களும் அதற்கு தகுந்த போல மாறி, ஓடிடியில் படங்களை பார்த்து வருகின்றனர். இந்த வாரம் ஓடிடியில் என்ன என்ன படங்கள் வெளியாக உள்ளன என்பதை பார்க்கலாம்.

எனிமி

எனிமி

விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பில் திரையரங்கில் வெளியானத் திரைப்படம் எனிமி. இத்திரைப்படத்தில் ஆர்யா முதன்முறையாக மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இந்த சோனிலிவ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 18ந் தேதி வெளியாக உள்ளது.

இறுதிப்பக்கம்

இறுதிப்பக்கம்

மனோ வி கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இறுதிப்பக்கம். இது ஒரு பரபரப்பூட்டும் த்ரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் அம்ருதா சீனிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாகவுள்ளது.

பங்கர்ராஜூ ( தெலுங்கு )

பங்கர்ராஜூ ( தெலுங்கு )

நாகார்ஜூன், நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான படம் பங்கர்ராஜூ. பொங்கலுக்கு திரையரங்கில் வெளியான இப்படம் 9.06 கோடி வசூலை வாரிக்குவித்தது. ஜீ5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 18ந் தேதி வெளியாக உள்ளது

மித்யா (இந்தி)

மித்யா (இந்தி)

வலிமை பட ஹீரோயின் ஹுமா குரேஷி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் மித்யா. இப்படத்தில் பாக்யஸ்ரீயின் மகள் அவந்திகா தசானி அறிமுகமாகி உஉள்ளார். ரோஹன் சிப்பி இயக்கத்தில் உருவாகி உள்ள மித்யா திரைப்படம் பிப்ரவரி 18ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலிஸாக உள்ளது.

பேமிலிபேக் (கன்னடம்)

பேமிலிபேக் (கன்னடம்)

ஏ தர்ஸ்டே என்ற ஹிந்தி படம் ஹாட்ஸ்டாரிலும், த்ரிஷ்யா 2 என்ற கன்னட திரைப்படம் ஜீ 5 ஓடிடியிலும், மேப்படியான் என்ற மலையாள திரைப்படமும், பேமிலிபேக் என்ற கன்னட திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. அதே போல, விமல், இனியா நடிக்கும் விலக்கு என்ற வெப் தொடர் பிப்ரவரி 18ந் தேதி ஜீ5 ஓடிடியிலும், சரத்குமார் நடிப்பில் உருவான இரை வெப் சீரிஸ் ஆஹா ஓடிடியில் இன்று ரிலீஸாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X