This Week OTT Release - இந்த வார ஓடிடி ரிலீஸ்.. டியூட் முதல் பைசன்வரை.. ஓடிடியில் செம திருவிழா

சென்னை: ஓடிடியில் ரிலீஸாகும் படங்களையும், வெப் சீரிஸ்களையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் எப்போதுமே ஆவலோடு வெயிட் செய்துகொண்டிருப்பார்கள். இந்நிலையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து பார்க்கலாம். தமிழில் டியூட், பைசன் ஆகிய படங்கள் தியேட்டர்களில் பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது ஓடிடியிலும் ரிலீஸாகவிருக்கின்றன.

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது போன்று தற்போது ஓடிடியில் படம் பார்ப்பதும் இந்தியாவில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. தியேட்டர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்வதைவிடவும், வீட்டில் இருந்தபடியே நிம்மதியாக அதே பணத்துக்கு மாத கணக்கில் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களையும் பார்க்கலாம் என்பதால் தற்போது ஓடிடி அனைவரது வீட்டிலும் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது.

வாரா வாரம் ரிலீஸ்: தமிழ்நாட்டை பொறுத்தவரை தியேட்டர்களில் ரிலீஸான படங்கள் குறிப்பிட்ட கால அளவு (8 வாரங்கள்) கடந்த பிறகுதான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்பது விதிமுறை. சமீபத்தில்கூட நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

This Week OTT Release Dude Bison Jurassic World Rebirth and More Streaming on Major Platforms
Photo Credit:

டியூட்: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் டியூட். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் சக்கைப்போடு போட்டது. 100 கோஇ ரூபாய்க்கும் மேல் வசூலில் அள்ளியது. அந்தப் படமானது நாளை முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகவிருக்கிறது.

பைசன் - காளமாடன்: இதே தீபாவளிக்கு டியூட் படத்துக்கு போட்டியாக களமிறங்கிய படம்தான் பைசன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படமும் மெகா ஹிட்டானது. மொத்தம் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்வரைக்கும் வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. அந்தப் படமானது நவம்பர் 21ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகவிருக்கிறது.

ஜுராசிக் வேர்ல்ட்: ஜூராசிக் தொடர்பான படங்களுக்கென்று உலகம் முழுவதும் எப்போதுமே தனி மவுசு உண்டு. இதுவரை வெளியான படங்கள் எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருமே கவர்ந்திருக்கிறது. அப்படித்தான் சமீபத்தில்தான் ஜூராசிக் வேர்ல்ட் ரீ பர்த் திரைப்படமும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இப்படமானது நாளை முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமாகவிருக்கிறது.

மற்ற படங்கள்: அதேபோல், ஹேப்பி மேரிட் லைஃப் திரைப்படம் ஷார்ட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமாகிறது. மேலும் டெல்லி க்ரைம் தொடரின் மூன்றாவது சீசன் இன்று முதலும், தெலுசு கதா படம் நாளை முதலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமாகவிருக்கின்றன. மேலும் ஹுலு ட்ராகன் பால்ஸ் சீசன் 5ம் அதே ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படி ஏகப்பட்ட படங்களும், வெப் சீரிஸ்களும் வெளியாவதால் ரசிகர்களுக்கு ஓடிடியில் ஒரே கொண்டாட்டம்தான்.

More from Filmibeat

Read more about: bison ஓடிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X