This Week OTT Release: ஜெயிலருக்கு டிக்கெட் கிடைக்கலையா... OTT-யில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்

சென்னை: இந்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது.

இதனால், திரையரங்குகளில் ஜெயிலர் தவிர சின்ன பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அதேநேரம் ஜெயிலருக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஓடிடி தளங்களில் இரண்டு சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் வெளியாகின்றன.

 This Week OTT Release: Maaveeran, Por Thozhil, and more films are releasing on OTT platforms this week

ஜெயிலருக்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்களுக்கு இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

மாவீரன் முதல் போர் தொழில் வரை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்று (ஆக.10) உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே இந்தப் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பால் ஜெயிலர் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. முதல் 5 நாட்களுக்கு ஜெயிலர் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், டிக்கெட் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் ரசிகர்களுக்காக ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் ஆறுதலாக அமையும்.

அதன்படி இந்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த மாவீரன், ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் 14ம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் திரையரங்குகளில் வெளியானது மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 80 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில் நாளை (ஆக.11) முதல் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீமிங் ஆகிறது மாவீரன். இதனால் ஓடிடி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

அதேபோல், இன்னொரு சூப்பர் ஹிட் படமான போர் தொழில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான போர் தொழில், யாருமே எதிர்பார்க்காத வகையில் தாறுமாறான ஹிட் அடித்தது. அசோக் செல்வன், சரத்குமார் நடித்த இந்தப் படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்தப் படம் தற்போது சோனி ஓடிடியில் வெளியாகிறது. இதுதவிர தமிழில் வான் மூன்று என்ற திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

மலையாளத்தில் பத்மினி என்ற திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. குஞ்சக்கா போபன், மடோனா செபாஸ்டியன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை சென்னா ஹெக்டே இயக்கியுள்ளார். ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான பத்மினி, இந்த வாரம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங்காகிறது. மேலும், மலையாளத்தில் நெல்சன் கஃபூர், மேத்யூ தாமஸ் நடித்துள்ள 'நெய்மர்' திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகிறது.

தெலுங்கில் 'ஹிடிம்பா' திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. இந்தியில் கமெண்டோ என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும், The Kashmir Files: Unreported டாக்குமெண்டரி சீரிஸ் ஜீ 5 தளத்திலும் ரிலீஸாகிறது. மேலும், ஹாலிவுட் ரசிகர்களுக்காகவும் சில திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X