OTT movies: இந்த வார ஓடிடி படங்கள்.. வேட்டையன், தேவரா, ஏஆர்எம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை: திரையரங்குகளில் படங்களை அவற்றின் ரிலீஸை கொண்டாடுவது போலவே ஓடிடியிலும் படங்களின் வெளியீட்டை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்காக ரசிகர்கள் காத்திருப்பதை பார்க்க முடிகிறது. அனைத்து படங்களையும் திரையரங்குகளில் அதுவும் குடும்பத்துடன் சென்று பார்ப்பது என்பது சாத்தியப்படாத நிலையில் ஓடிடி மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.

வீட்டிற்குள்ளேயே ஹோம் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் இத்தகைய படங்களை குடும்பத்தினருடன் ஸ்நாக்ஸ் உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு பார்ப்பது மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைகிறது. அதிலும் தற்காலங்களில் திரையரங்குகளில் சென்று ஒரு படத்தை பார்ப்பது என்பது மிக அதிகமான செலவாக மாறியுள்ள சூழலில் மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகச் சிறப்பான ஒரு வரமாகவே ஓடிடி படங்கள் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் ஓடிடியில் சிறப்பான படங்கள் ரிலீசாக உள்ளன.

ott movies kozhipannai chelladurai prasanna vadanam

ஓடிடியில் வெளியாகும் படங்கள்: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வித்தியாசமான மற்றும் சிறப்பான படங்கள் ரிலீசாகி வருவதை போலவே கடந்த வாரமும் தீபாவளியை கொண்டாட்டமாக அமரன், பிளடி பெக்கர், பிரதர், லக்கி பாஸ்கர் என நான்கு படங்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் தீபாவளியையொட்டி ஓடிடியிலும் சிறப்பான படங்கள் ரிலீஸ்சாகியிருந்தன. இந்நிலையில் இந்த வாரமும் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன.

இந்த வார ஓடிடி படங்கள்: திரையரங்குகளில் சென்று அனைத்து படங்களையும் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே ஓடிடி படங்கள் பார்க்கப்படுகின்றன. திரையரங்குகளில் ரிலீசாகும் படங்கள் சில வாரங்களிலேயே ஓடிடியில் காணக் கிடைக்கின்றன. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தினால் சமீபத்திய படங்கள் முதல் கிளாசிக் படங்கள், ஹாலிவுட், பாலிவுட் என மற்ற மொழிப் படங்கள் என அனைத்தையும் ஓடிடி மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதனால் வித்தியாசமான அனுபவங்களை வித்தியாசமான இயக்குநர்களின் கைவண்ணங்களை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ott movies kozhipannai chelladurai prasanna vadanam

சீனு ராமசாமி படம்: சினிமா லவ்வர்களுக்கு மட்டுமில்லாமல் தன்னுடைய விடுமுறை நாட்களை சிறப்பாக கொண்டாட நினைக்கும் ரசிகர்களுக்கும் இந்த ஓடிடி மிக சிறப்பான வரமாகவே அமைந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் ஓடிடியில் அடுத்தடுத்து படங்கள் தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் ரிலீசாகவுள்ளன. அவை குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்த கோழிப்பண்ணை செல்லதுரை படத்தை பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். இந்தப் படம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

சமந்தாவின் சிட்டாடல் ஹனி பன்னி: இதனிடையே தெலுங்கில் கிரைம் திரில்லராக வெளியான பிரசன்ன வதனம் படம் தமிழில் டப் செய்யப்பட்டு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதேபோல சமந்தா, வருண் தவான் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடர் பிரைம் வீடியோவில் பல மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்த வெப் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடி ஆக்ஷன் நாயகியாக இதில் சமந்தா நடித்துள்ளார். இதேபோல மலையாளத்தில் விவேகானந்தன் விரலானு படம் மலையாள மொழியில் உருவாகி தற்போது பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.

வேட்டையன், தேவரா படங்கள்: இதனிடையே தெலுங்கில் ஜனக ஆய்தே கனகா, லைஃப் ஸ்டூரிஸ் படங்கள் ஆஹா வீடியோவிலும் ETv வின்னிலும் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் Despicable me 4 & Blue cave படங்கள் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. நாளைய தினம் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள Outerbanks seriesன் 4வது பாகமும் My old Ass படமும் வெளியாகவுள்ளன. இவை நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளன. நாளைய தினம் ரஜினிகாந்தின் வேட்டையன் படம், தேவரா படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஏஆர்எம் படம், தி பக்கிங்காம் மர்டர்ஸ் பாலிவுட் படம், விஜய் 69 மற்றும் தி கேஜ் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.இதேபோல வரும் 9ம் தேதி It end with us படம் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இந்த வாரம் வெளியாகவுள்ள இந்த அதிரடி படங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X