twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்... பீஸ்ட்.. தி காஷ்மீர் ஃபைல்ஸ்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

    |

    சென்னை : திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு தமிழ் படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் அதே அளவிற்கு ஓடிடியிலும் புதிய படங்களும் ஏற்கனவே திரையரங்கில் ரிலீஸ் ஆன படங்களும் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் இந்த வாரம் பீஸ்ட், தி காஷ்மீர் ஃபைல்ஸ் உள்ளிட்ட திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

    இந்த வாரம் ஓடிடியில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளது என்று பார்க்கலாமா?

     அஜித் சார் சொன்னது மறக்கவே முடியாது... விக்னேஷ் சிவன் பகிர்ந்து முக்கிய தகவல்! அஜித் சார் சொன்னது மறக்கவே முடியாது... விக்னேஷ் சிவன் பகிர்ந்து முக்கிய தகவல்!

    பீஸ்ட்

    பீஸ்ட்

    நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடி வசூலித்து தந்துள்ளது. மே 11 ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில், விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆபரேஷன் மின்ஸ்மீட்

    ஆபரேஷன் மின்ஸ்மீட்

    "ஆபரேஷன் மின்ஸ்மீட்" திரைப்படம் மே 11ந் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம்,1943ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமைக்கப்பட்ட பிரிட்டனின் "ஆபரேஷன் மின்ஸ்மீட்" பற்றிய பென் மக்கின்டைரின் 2010 புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கொலின் ஃபிர்த், ஜானி ஃபிளின், ஜேசன் ஐசக்ஸ், மேத்யூ மக்ஃபேடியன், கெல்லி மெக்டொனால்ட், பால் ரிட்டர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    Senior Year

    Senior Year

    "சீனியர் இயர்" இப்படம் மே 13ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில், 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 37 வயது பெண் கோமாவில் இருந்து மீண்டு, தனது பள்ளிக்கு வருகிறார். இத்திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாகும். வில்சன், ஜோ சாவோ, சாம் ரிச்சர்ட்சன், மேரி ஹாலண்ட், கிறிஸ் பார்னெல், அலிசியா சில்வர்ஸ்டோன், ஜஸ்டின் ஹார்ட்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

    Stranger Things

    Stranger Things

    ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் புனைகதை திகில் தொடராகும். நான்காவது சீசன் இரண்டு பகுதிகளாக வெளியிடப்படும், அதில் முதல் பகுதி மே 27ந் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதில், வினோனா ரைடர், டேவிட் ஹார்பர், ஃபின் வொல்ஃஹார்ட், மில்லி பாபி பிரவுன், கேடன் மாடராஸ்ஸோ ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

    Recommended Video

    காட்சிகளில் பதைபதைப்பு கண்களை கலங்க வாய்த்த தி காஷ்மீர் ஃபைல்ஸ்
    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ்

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ், காஷ்மீரி பண்டிட்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த படத்தில்,அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி மற்றும் தர்ஷன் குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மே 13ஆம் தேதி ஜீ5 தளத்தில்வெளியாகிறது.

      English summary
      This week ott Release Movies 06-05-2022
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X