This week OTT Release : இந்த வாரம் ஓடிடியில் எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?
சென்னை : திரையரங்கில் வெளியாகும் படங்களை விட ஓடிடியில் வெளியாகும் படங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது.
விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு வீட்டில் இருந்தபடியே படங்களை பார்ப்பது தனி கொண்டாட்டமாகவே மாறிவிட்டது.
இதனை சரியாக புரிந்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள் வாரம் தோறும் ஓடிடியில் படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படம் வெளியாக போகிறது என்பதை பார்க்கலாம்.

சாகுந்தலம் : நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் அமேசான் பிரைமில் மே 12ந் தேதி வெளியாகி உள்ளது. காளிதாசரால் எழுதப்பட்ட சாகுந்தலம் என்ற புராண காதல் கதையை படமாக்கியிருக்கிறார் தெலுங்கு இயக்குநர் குணசேகர். இதில் சாகுந்தலையா சமந்தாவும் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
சொப்பன சுந்தரி : எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சொப்பன சுந்தரி ஏப்ரல் 14ந் தேதி வெளியான நிலையில் இத்திரைப்படம் மே 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இப்படத்தில் லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, சதீஷ் கிருஷ்ணன், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Dahaad : சோனாக்ஷி சின்ஹா, குல்ஷன் தேவையா நடித்த தஹாத் (Dahaad) திரைப்படம் மே 12ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இளம் பெண்களின் தொடர் மர்மமான மரணத்தை விசாரிக்கும் சப் இன்ஸ்பெக்டராக சோனாக்ஷி சின்ஹா இப்படத்தில் நடித்துள்ளார்.
Taj: Reign Of Revenge : மூத்த பழம் பெரும் நடிகர் நசீருதீன் ஷா பேரரசர் அக்பர் கதாபாத்திரத்தில் நடித்த Taj : Divided By Blood வலைத் தொடர் சிலமாதங்களுக்கு முன் வெளியாகி பாராட்டை பெற்ற நிலையில், Taj: Reign Of Revenge சீசன் 2 மே 12ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நாடு கடத்தப்பட்ட சலீம் 15 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வந்து பழிவாங்குவதில் இருந்து கதை தொடங்குகிறது.
Web series : Homestay Murders ஒரு பெங்காலி வலைத்தொடராகும். இந்த தொடரை Hoichoi ஓடிடி தளத்தில் மே 12ந் தேதியில் இருந்து காணலாம். ஒரு பனி பிரதேசத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வருபவர்கள், இந்த மாளிகையில் துரதிர்ஷ்டவசமாக சிக்கிக் கொள்ள, அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை எபிசோடுக்கு எபிசோடு சொல்லி இருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











