பொன்னியின் செல்வன், இரவின் நிழலை தொடர்ந்து ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்….

சென்னை: திரையரங்குகளில் இந்த வாரம் காஃபி வித் காதல், நித்தம் ஒரு வானம். லவ் டுடே ஆகிய படங்கள் வெளியாகின்றன.

அதேபோல், ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் சூப்பரான படங்களும் வெப் சீரிஸ்களும் ரிலீஸாகின்றன.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன், இரவின் நிழல் ஆகிய படங்களும் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாக காத்திருக்கின்றன.

அமேசானில் பொன்னியின் செல்வன்

அமேசானில் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ள பொன்னியின் செல்வன் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்ஸாக கடந்த வாரம் அமேசானில் வெளியானது பொன்னியின் செல்வன். ஆனால், இந்தப் படம் HD குவாலிட்டியில் ரூ.199க்கு ரெண்டல் அடிப்படையில் பார்க்கலாம் என அமேசான் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வாரம் அமேசான் சந்தாதாரர்களுக்காக பொன்னியின் செல்வன் வெளியாகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்கில் பார்க்காமல் விட்ட ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

பார்த்திபனின் இரவின் நிழல்

பார்த்திபனின் இரவின் நிழல்

ஓடிடி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இரவின் நிழல் திரைப்படமும் இந்த வாரம் வெளியாகிறது. இருதினங்களுக்கு முன்னரே இரவின் நிழல் அமேசானில் வெளியாகும் என பார்த்திபன் அறிவித்திருந்தார். ஆனால், சில டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக சொன்னபடி வெளியாகாமல் போன இரவின் நிழல், இந்த வாரம் இறுதிக்குள் வெளியாகிறது. உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல், பார்த்திபனின் புதிய முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. திரையரங்க ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடமும் பெரிய சக்சஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டைக்காளி வெப் சீரிஸ்

பேட்டைக்காளி வெப் சீரிஸ்

ஆஹா தமிழ் ஓடிடியில் கடந்த இரண்டு வாரங்களாக பேட்டைக்காளி வெப் சீரிஸ் ஒளிபரப்பாகி வருகிறாது. வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகும் இந்த சீரிஸில், இதுவரை இரண்டு எபிசோட்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மூன்றாவது எபிசோட் நாளை வெளியாகிறது. வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், கையும் களவும் வெப் சீரிஸும் நாளை வெளியாகிறது. மடோனா செபாஸ்டியன், கரு பழனியப்பன், செந்தில் ஆகியோர் நடித்துள்ள இது, த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸ்க்கும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பிரம்மாஸ்திரா, தி கோஸ்ட்

பிரம்மாஸ்திரா, தி கோஸ்ட்

தெலுங்கில் நாகர்ஜுனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கோஸ்ட்.' ஆக்சன் ஜானரில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தி கோஸ்ட் தற்போது, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதேபோல், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன் நடித்துள்ள பிரம்மாஸ்திரா படமும் டிஸ்னி ப்ளஸ் ஓடிடியில் நாளை வெளியாகிறது. மேலும், பிரகாஷ் ராஜ் இயக்கியுள்ள 'தட்கா' படம் ஜீ 5 ஓடிடியில் நாளை வெளியாகிறது. நானா படேகர், ஷ்ரியா சரண், டாப்ஸி பண்ணு, அலி ஃபசல் நடித்துள்ள இந்தப் படம், மலையாளத்தில் ஹிட் அடித்த சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X