OTT releases this week: இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட்!

சென்னை: சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சி இயக்கத்தில் சதீஸ் நடித்துள்ள படம் 'சட்டம் என் கையில், பிடி சார், அந்தகன், ஜாலியோ ஜிம்கானா திரைப்படங்கள் 6ந் தேதி வெளியான நிலையில் பொங்களை சிறப்பிக்கும் வகையில் பலத்திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளன. அவை என்னென்ன படம் என்று பார்க்கலாம்.

அதோமுகம்: தனது காதல் மனைவியின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான பரிசு கொடுக்க நினைக்கும் கணவன். மனைவியின் ஸ்மார்ட் ஃபோனில் ' ஸ்பை கேமரா ஆப்' இன்ஸ்டால் செய்து, மனைவியின் அன்றாட நடவடிக்கைகளை அலுவலகத்திலிருந்து ரகசியமாக நோட்டம் விடுகிறார். அதன் மூலம் மனைவிக்கு வேறு ஒருவருடன் இருக்கும் தொடர்பு தெரியவருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் அதோமுகம் படத்தின் கதை. இப்படத்தில் எஸ். பி. சித்தார்த், சைதன்யா பிரதாப், சரித்திரன், ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

atho mugam scene number 62

சீன் நம்பர் 62: ஐந்து நண்பர்களும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைகின்றனர். அப்போது ஒரு படத்தில் ஐந்து பேருக்கும் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைக்கிறது. படத்தின் பயிற்சிக்காக இயக்குனர், அவர்களை மலைப்பிரதேசத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு அனைவரும் ஒரு வீட்டில் தங்கி இருக்கும் நிலையில், காலையில் அனைவரின் காலும், கையும் சங்கிலியால் கட்டப்பட்டு. கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. இதை செய்தது யார்... எதற்காக இப்படி செய்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. இப் படத்தை ஆதம் சர்மா இயக்கியுள்ளார். மேலும் ராஜ்பால், கோகிலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாக உள்ளது.

சூக்ஷமதர்ஷினி : நடிகை நஸ்ரியா பாசில் நடித்துள்ள திரைப்படம் சூக்ஷமதர்ஷினி. இப்படத்தில் தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகில பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.சி.ஜித்தின் இயக்கும் இப்படத்தை சமீர் தாஹிர், ஷைஜு காலித் இணைந்து தயாரித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் படத்துக்கு இசையமைத்துள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.

atho mugam scene number 62

பானி(மலையாளம்): ஜித்து ஜார்ஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியான மலையாள திரைப்படம் தான் பானி. இப்படம் தியேட்டரில் வெளியான போது, பெரும் விவாதத்தை ஏற்படுத்தினாலும், விமர்சன ரீதியான பாராட்டுகளுடன் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது. இப்படத்தில், நடிகை அபிநயா முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படம், சோனி லைவ்வில் நாளை வெளியாக உள்ளது.

atho mugam scene number 62

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரிப்போர்ட்: 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து உருவான திரைப்படம் தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரிப்போர்ட். இந்தி திரைப்படமான இப்படத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோர் நடித்துள்ளனர். தீரஜ் சர்னா இயக்கிய இப்படம் நவம்பர் 15ந் தேதி தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது. பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் ஜனவரி 10 ஆம் தேதியான நாளை Zee5 OTTயில் வெளியாக உள்ளது.

கூஸ்பம்ப்ஸ்: இரட்டையர்களான செஸ் மற்றும் டெவின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட, இருவரும் தந்தையுடன் கோடைகாலத்திற்காக புரூக்ளினுக்குச் செல்கிறார்கள். டேவிட் ஸ்விம்மர், அந்தோனி ப்ரூவர், அனா ஓர்டிஸ், ஜேடன் பார்டெல்ஸ், சாம் மெக்கார்த்தி மற்றும் எலிஜா எம். கூப்பர் ஆகியோர் நடித்துள்ளனர். கூஸ்பம்ப்ஸ் இணையத் தொடர் ஜனவரி 10 முதல் Netflix இல் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X