OTT Release: இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்.. அட தமிழ்ல இத்தனை படங்கள் வெளியாகுதா!
சென்னை: திரையரங்குகளில் ஏராளமான படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளுக்கு இணையான வரவேற்பை ஓடிடியும் பெற்று வருகிறது.
குறிப்பாக கொரோனா உள்ளிட்ட நெருக்கடி காலங்களில் ஓடிடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது தற்போதும் தொடர்ந்து வருகிறது.
தனக்கு தேவையான படங்களை தேவையான நேரங்களில் பார்க்கும் வசதியை ரசிகர்களுக்கு ஓடிடி தந்து வருவது வரவேற்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களின் பட்டியல்: சமீபகாலங்களில் திரையரங்குகளில் ஏராளமான படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக கொரோனா காலங்களில் திரையரங்குகள் மூடப்பட்ட நிலை காணப்பட்டபோது, ரசிகர்களுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது ஓடிடி தளங்கள். ஏராளமான ஓடிடி தளங்களில் குறைவான கட்டணங்களில் தங்களுக்கு பிடித்த படங்களை பார்க்கும் வசதிகள் ரசிகர்களுக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. இதன்மூலம் ஏராளமான தங்களால் பார்க்க முடியாத கிளாசிக் படங்களைகூட ரசிகர்கள் பார்க்க முடிகிறது.
ஒவ்வொரு வாரமும் சில படங்கள் நேரடியாகவும் சில படங்கள் திரையரங்க ரிலீசுக்கு பின்பும் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் தமிழில் அடுத்தடுத்த சிறப்பான படங்கள் வெளியாகவுள்ளன. மற்ற மொழிப் படங்களும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளன. வரும் ஜூன் 30ம் தேதி இந்தப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படங்களை பார்க்க தற்போது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழில் மட்டுமே 4 படங்கள் இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ளன. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் படமும் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற குட்நைட் படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்தப் படங்களுடன் குலசாமி மற்றும் விமானம் படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. இந்தப் படங்கள் முறையே அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், டென்ட்கொட்டா மற்றும் ஜீ5 தளங்களில் வெளியாகவுள்ளன.
இதேபோல தெலுங்கில் நின்னு சேரே தருணம் என்ற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் நித்திகாகாக்கொரு பிரேமன்டார்ன் படம் சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தியில் சர்ஜெண்ட், லஸ்ட் ஸ்டோரீஸ் 2, அஃப்வா, லக்காத் பாக்கா, ஷனயா ஆகிய படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன. இதில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இது ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
ஹாலிவுட்டிலும் FastX, Run Rabbit Run, Nimnona போன்ற படங்கள் வெளியாகவுள்ளன. இதனிடையே கொரியன் மொழியில் செலபிரிட்டி மற்றும் தாய் மொழியில் டெலிட் ஆகிய வெப் தொடர்கள் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளன. இவையும் ரசிகர்களின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளன. அடுத்தடுத்த மொழிகளில் வெளியாகும் இந்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளில் வெளியான தமிழ் படங்களான வீரன் மற்றும் குட்நைட் படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications











