இந்த வார ஓடிடி படங்கள் பத்தி பாக்கலாமா... வலிமையும் ஜாய்ன் ஆகியிருக்கே!

சென்னை : கொரோனா காலத்தில் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தவை ஓடிடி படங்கள். வெளியில் சென்று படங்களை பார்க்க முடியாதவர்கள், வீட்டிலிருந்தபடியே புதிய படங்களை ஓடிடி மூலம் பார்த்துக் கொண்டனர். இந்த வாரமும் முக்கியமான படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் நேரடியாகவும் திரையரங்க வெளியீட்டிற்கு பின்பும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்தப் படங்களை வீட்டிலிருந்தே குடும்பத்தினருடன் பார்க்கும் வசதி உள்ளதால் பலர் விரும்பி பார்த்து வருகின்றனர். ஓடிடியில் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அனைத்து வகையான படங்களையும் பார்க்க முடியும் என்பதால் ரசிகர்கள் ஓடிடி ரிலீஸ் படங்களுக்கு தொடர்ந்து விருப்பம் தெரிவிக்கின்றனர்.

வரப்பிரசாதமான ஓடிடி படங்கள்

வரப்பிரசாதமான ஓடிடி படங்கள்

அதிலும் கொரோனா பாதித்த நேரங்களில் வெளியில் செல்ல முடியாத சூழல் காணப்பட்டது. இதேபோல திரையரங்குகளிலும் கட்டுப்பாடுகள் இருந்த சூழலில் ஓடிடியே ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. சமீபத்திய படங்கள் முதல் சிறப்பான பழைய படங்களையும் ஓடிடி மூலம் பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பிரபலங்கள் ஆர்வம்

பிரபலங்கள் ஆர்வம்

இதையடுத்து பிரபலங்கள் பலரும் ஓடிடி தளத்தை புதிதாக துவக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் ஷாருக்கும் தனது புதிய ஓடிடி தளம் குறித்த அறிவிப்பை மேற்கொண்டார். தெலுங்கில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆஹா ஓடிடி தளமும் தமிழில் தற்போது கால்பதித்துள்ளது. அந்த அளவில் தளங்கள் சிறப்பாக காணப்படுகின்றன.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த வாரமும் சிறப்பான படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன. குறிப்பாக தமிழில் அஜித்தின் வலிமை படம் வரும் 25ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசான இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் ரிலீசாக உள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

வலிமை படம் ரிலீஸ்

வலிமை படம் ரிலீஸ்

இதன்மூலம் திரையரங்குகளில் சென்று படத்தை பார்க்க முடியாதவர்களும் தங்களது குடும்பத்தினருடன் வீட்டிலேயே பார்க்க முடியும் என்றும் அடிக்கடி படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்றும் அஜித் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

பீம்லா நாயக் ரிலீஸ்

பீம்லா நாயக் ரிலீஸ்

இதேபோல பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள பீம்லா நாயக் படமும் வரும் 25ம் தேதி ஆஹா வீடியோ மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் சிறப்பான வசூலை எட்டிய நிலையில், ஓடிடியிலும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது.

டுயூன் படம் ரிலீஸ்

டுயூன் படம் ரிலீஸ்

இதேபோல 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட சயின்ஸ் பிக்ஷன் படமான டுயூன் படமும் அமேசான் ப்ரைமில் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது. இதேபோல இந்தப் படத்தை கூகுள் ப்ளே மற்றும் யூடியூபிலும் பார்த்துக் கொள்ளலாம். இதனிடையே ஹாலிவுட்டின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ஹாலோ, வரும் 24ம் தேதி வூட்டில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Kuthiraivaal Premier show | ஒரு ஆங்கில படத்திற்கு இணையான திரைப்படம் - மிஷ்கின்
பிரிட்ஜர்டன் சீசன் 2 ரிலீஸ்

பிரிட்ஜர்டன் சீசன் 2 ரிலீஸ்

இந்தப் படம் பிரபல வீடியோ கேமை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் வெளியாகியுள்ளது. இதனிடையே நெட்பிளிக்சில் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது பிரிட்ஜர்டன் சீசன் 2 வெப் சீரிஸ். இந்த தொடரில் சைமன் ஆஷ்லி, ஜோனாதன் பெய்லி சரித்ரா சந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X