This Week OTT Release - இந்த மழையில் ஜாலியாக வீட்டில் இருந்தே ஓடிடியில் படம் பாருங்கள்.. ரிலீஸ் லிஸ்ட் இதுதான்

சென்னை: இந்தியா முழுவதுமே ஓடிடி வளர்ச்சி அதிகமாகிவிட்டது. ரசிகர்களும் தியேட்டருக்கு சென்று எக்கச்சக்க செலவு செய்து படம் பார்ப்பதற்கு சந்தா கட்டி வீட்டில் இருந்தப்டியே குடும்பத்துடன் படம் பார்க்கும் பழக்கத்துக்கு தங்களை தயார் செய்துகொண்டார்கள். இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கத்தான் சில வருடங்களுக்கு முன்புவரை ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் கொரோனா வைரஸால் போடப்பட்ட லாக் டவுன் அந்த நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ஆரம்பித்தது. அது ஒருபக்கம் இருக்க; தியேட்டர்களுக்கு சென்றால் செலவு அதிகமாகி வீட்டு பட்ஜெட்டிலும் இடிக்கும் நிலைமை உருவானது. எனவே ரசிகர்களின் கவனம் முழுக்க முழுக்க ஓடிடி பக்கம் செல்ல ஆரம்பித்தது.

சூப்பர் வளர்ச்சி: தியேட்டருக்கு சென்று லம்ப்பாக பணத்தை காலி செய்து படம் பார்ப்பதற்கு ஓடிடியில் சந்தா கட்டினால் புது படங்கள், பழைய படங்கள், வெப் சீரிஸ்கள் என பலவற்றை குடும்பத்துடன் அமர்ந்து ஜாலியாக பார்க்கலாம் என்ற மைண்ட் செட் கிட்டத்தட்ட 95 சதவீதம் பேருக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக தியேட்டரில் ரிலீஸாகும் படங்கள் மட்டுமின்றி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கென்றே படங்களும், வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துவ்ட்டன.

This Week OTT Release New Movies and Web Series Streaming from December 5
Photo Credit:

இந்த வார ரிலீஸ்: இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் பற்றி இதில் பார்க்கலாம். நடு சென்ட்டர் வெப் சீரின் 7,8,9ஆவது எபிசோடுகள் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. அதேபோல் கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்ம்ருதி வெங்கட், விஜய்ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருக்கும் கோமதி சங்கர் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது.

குற்றம் புரிந்தவன்: பசுபதி, லட்சுமி பிரியா, விதார்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் டிசம்பர் 5ஆம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது. இது மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்டது. செல்வமணி என்பவர் இந்த சீரிஸை இயக்கியிருக்க அவினாஷ் தயாரித்திருக்கிறார். பசுபதி முக்கியமான ரோலை ஏற்றிருப்பதால் ரசிகர்களிடையே ஓரளவுக்கு ஹைப்பை பெற்றிருக்கிறது இந்த வெப் சீரிஸ்.

தி கேர்ள் ஃப்ரெண்ட்: நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி தியேட்டர்களில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற தி கேர்ள் ஃப்ரெண்ட் திரைப்படம் நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. தியேட்டரில் கிடைத்தது போல் சுமாரான வரவேற்பு இல்லாமல் பெரிய வரவேற்பை ஓடிடியில் பெறும் என்று படக்குழு உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறது. இவை தவிர்த்து தூள்பெட் போலீஸ் ஸ்டேஷன் என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ஆஹா ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X