This week OTT Release: ஓடிடி ரசிகர்களுக்கு செம விருந்து.. ரிலீஸாகியிருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?
சென்னை: ஓடிடி தளங்கள் இப்போது ரசிகர்களின் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது. திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தோடு பார்த்தால் பட்ஜெட்டில் பெரிய துண்டு விழும் நிலை உருவாகியிருப்பதால்; அங்கே ரிலீஸாகும் படங்கள் ஓடிடியில் ரிலீஸாகும்வரை காத்திருந்து பார்க்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஓடிடியில் ரிலீஸாகியிருக்கும் படங்கள் விவரங்களை இதில் பார்க்கலாம்.
கொரோனாவுக்கு பிறகு உலகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறியிருகின்றன. அதே மாதிரிதான் திரைத்துறையிலும். முன்னர் எல்லாம் திரைப்படங்கள் பார்க்க வேண்டுமென்றால் தியேட்டருக்கு செல்வதுதான் முறையாக இருந்தது. ஆனால் கொரோனா வருகையால் ஏற்பட்ட மாற்றத்தில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. மக்களும் வருட சந்தா கட்டிவிட்டு குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே நிம்மதியாக படங்கள் பார்க்கலாம் என்ற மைண்ட் செட்டுக்கு வந்துவிட்டார்கள்.
தியேட்டர்களுக்கு சிக்கல்: ஓடிடியின் இந்த வளர்ச்சி திரையரங்குகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. தியேட்டரில் வெளியாகி குறிப்பிட்ட கால அளவுக்கு பிறகுதான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களும் தொடர்ந்து குரல்கள் கொடுத்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒன்று ஓடிடியில் ரிலீஸாகியிருக்கும் படங்கள் குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம்.

ஓடிடி ரிலீஸ்: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தை பொறுத்தவரை மலையாள படமனா Eko, ஹிந்தி படமான Haq ஆகியவைகள் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கின்றன. இவற்றி Eko திரைப்படம் தியேட்டர்களில் ஓரளவுக்கு ரெஸ்பான்ஸை பெற்றது. எனவே ஓடிடியிலும் அதே ரெஸ்பான்ஸை பெறுமா என்ற ஆவலில் இருக்கிறது படக்குழு. அதேபோல் ரன் அவே என்ற ஆங்கில வெப் சீரிஸும் நெட்ஃப்ளிக்ஸில் இன்று முதல் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது.
அமேசான் ப்ரைமில்: அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், கும்கி 2, மலையாளத்திலிருந்து இன்னொசெண்ட் ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன. பிரபு சாலமன் இயக்கியிருந்த கும்கி 2 திரைப்படம் திரையரங்குகளில் பெரிய அளவுக்கு ரெஸ்பான்ஸை பெறவில்லை. எனவே ஓடிடியிலாவது ரசிகர்களிடன் ஏகோபித்த ஆதரவை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மற்ற ஓடிடிகளில்: சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மலையாள படமான இதிரி நேரம் ஸ்ட்ரீமாகிறது. அதேபோல் ஹாட் ஸ்டார் ஓடிடியில், விக்ராந்த் நடித்திருக்கும் LBW வெப் சீரிஸ் வெளியாகியிருக்கிறது. இந்த வெப் சீரிஸின் எபிசோடுகள் வாரா வாரம் வியாழக்கிழமை ரிலீஸாகும். முதலில் நான்கு எபிசோடுகள் வெளியாகியிருக்கின்றன. மேலும் ஜீ 5 ஓடிடி தளத்தில் பியூட்டி என்ற படமும் ரிலீஸாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











