This Week OTT Release: இறைவன், சந்திரமுகி 2, பரம்பொருள்... இந்த வாரம் OTT ரிலீஸில் இத்தனை படங்களா?

சென்னை: சினிமா ரசிகர்களுக்கு கடந்த வாரம் விஜய்யின் லியோ திரையரங்குகளில் வெளியானது.

லியோ ஃபீவர் ஒரே வாரத்தில் ஓய்ந்துவிட்டதால், சினிமா ரசிகர்கள் தற்போது ஓடிடி பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 This Week OTT Release Oct 27: Iraivan, Chandramukhi 2, and Paramporul are to be released in OTT this week

அவர்களுக்கு இந்த வாரம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் லிஸ்ட் இதோ.

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளைத் தொடர்ந்து இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப் படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதன்படி முதலிடத்தில் சந்திரமுகி 2 ரிலீஸை ஓடிடி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு ஆகியோர் நடித்த சந்திரமுகி 2, தியேட்டரில் வரவேற்பு இல்லாமல் ஒரே வாரத்தில் படுத்துவிட்டது. இந்தப் படம் வரும் 27ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

 This Week OTT Release Oct 27: Iraivan, Chandramukhi 2, and Paramporul are to be released in OTT this week

சந்திரமுகி 2ம் பாகத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் இறைவன் படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகிறது. அஹமத் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படமாக வெளியான இறைவனில் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ட்ரெய்லரில் மட்டும் மிரட்டலாக இருந்த இறைவன், தியேட்டரில் வெளியாகி நெகட்டிவான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இந்நிலையில், இந்தப் படம் 27ம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

 This Week OTT Release Oct 27: Iraivan, Chandramukhi 2, and Paramporul are to be released in OTT this week

சந்திரமுகி 2, இறைவன் வரிசையில் பரம்பொருள் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சரத்குமார், அமித்தாஸ் நடித்துள்ள இந்தப் படத்தை அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார். சிலை கடத்தலை பின்னணியாக வைத்து ஆக்‌ஷன் ஜானரில் பரபரப்பாக உருவான பரம்பொருள், ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் ஆஹா/ அமேசான் ப்ரைம் என இரு தளங்களில் வெளியாகிறது.

 This Week OTT Release Oct 27: Iraivan, Chandramukhi 2, and Paramporul are to be released in OTT this week

அதேபோல், விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைத்து தயாரித்த கூழாங்கல் திரைப்படமும் இந்த வாரம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது. சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற கூழாங்கல் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யாரோ என்ற தமிழ்ப் படமும் இந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

மலையாளத்தில் மாஸ்டர் பீஸ் என்ற படம் ஹாட்ஸ்டார் தளத்திலும், நதிகளில் சுந்தரி யமுனா படம் HR ஓடிடி தளத்திலும் வெளியாகின்றன. தெலுங்கில் ஸ்கந்தா என்ற படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது. மேலும், சூராபானம், கேஸ் 30, கிருஷ்ணா காடு அண்டே ஓக ரேஞ்ச் ஆகிய படங்கள் ஆஹா தளத்தில் வெளியாகின்றன. இதுதவிர பாலிவுட், ஹாலிவுட்டில் இருந்தும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X