This Week OTT Release: அடியே, குஷி, கிங் ஆஃப் கோதா... இந்த வாரம் OTT ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்!
சென்னை: திரையரங்குகளில் ரிலீஸாகும் திரைப்படங்கள், ஓடிடி தளங்ளிலும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இந்த வாரம் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன.

தமிழில் ஜிவி பிரகாஷின் அடியே, சமந்தாவின் குஷி, துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.
இதுதவிர இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
இந்த வரம் ஓடிடி ரிலீஸ்
தமிழில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அடியே திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான அடியே, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. டைம் ட்ராவல் ஜானரில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவான அடியே படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். இந்தப் படம் சோனி லிவ் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவான 'குஷி' திரைப்படம் இந்த மாதம் 1ம் தேதி வெளியாகியிருந்தது. சிவ நிர்வாணா இயக்கத்தில் தெலுங்கில் உருவான இந்தப் படம், தமிழிலும் வெளியானது. விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் ரொமான்ஸ் ப்ளஸ் கலர்ஃபுல் மேக்கிங் போன்றவற்றால், குஷி படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
அதேபோல், மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா திரைப்படமும், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கேங்ஸ்டர் ஜானரில் உருவான கிங் ஆஃப் கோதா படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. ஓடிடி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிங் ஆஃப் கோதா, இந்த வாரம் முதல் ஹாட்ஸ்டார் டிஸ்னி ப்ளஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இதுதவிர, தெலுங்கில் ஏஜெண்ட் சோனி லிவ் தளத்திலும், பாபம் பசிவாடு என்ற வெப் சீரிஸ் ஆஹா ஓடிடியிலும், குமாரி ஸ்ரீமதி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைம் தளத்திலும் வெளியாகின்றன. மலையாளத்தில் என்னிவர், ஜான்வி, கொரொனா தவான், சாஷியும் சாகுந்தலயும் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. இந்தியில், சூனா வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்திலும், ஐ கில்ட் பப்பு திரைப்படம் ஜீ5 ஓடிடியிலும் வெளியாகின்றன.
மேலும், Now here என்ற ஸ்பானிஷ் படம், Love Is In The Air, Encounters வெப் சீரிஸ், Forgotten Love, The Devils Plan என்ற கொரியன் வெப் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. இந்த வாரம் வெரைட்டியான படங்கள், வெப் சீரிஸ்கள் என ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











