இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பாலய்யா ரசிகர்களுக்கு செம வேட்டை.. என்ன என்ன புதுப்பட பொட்டி வந்துருக்கு?

சென்னை: தியேட்டர்களில் இந்த வாரம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் ஏதும் வெளியாகவில்லை. சில சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமே வெளியாகிறது. கடந்த வாரம் வெளியான வாத்தி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இரண்டாவது வாரத்தை கடக்கவே தியேட்டரில் போராடி வருகிறது.

அதற்கு முந்தைய வாரம் வெளியான கவினின் டாடா திரைப்படம் மட்டுமே மாலை காட்சிகளிலும் வார இறுதிக் காட்சிகளிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வருகிறது.

இந்நிலையில், சினிமா ரசிகர்களை இந்த வாரம் மகிழ்விக்க ஓடிடியில் என்ன என்ன புதிய படங்கள் வெளியாகி உள்ளன என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

அமேசானில் வாரிசு

அமேசானில் வாரிசு

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஃபேமிலி என்டர்டெயினர் படமாக கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி திரையில் வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய வாரிசு திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

ரஞ்சிதமே பாடல், ஜிமிக்கி பொண்ணு பாடல்களை ரிப்பீட் மோடில் போட்டு ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். விஜய் மற்றும் யோகி பாபு செய்யும் காமெடி காட்சிகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், ஓடிடியில் வெளியாகி உள்ள வாரிசு படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பாலய்யா படம்

பாலய்யா படம்

சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பிப்ரவரி 23ம் தேதியான இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹனி ரோஸ் உள்ளிட்ட நடிகைகள் நடித்துள்ளனர். மேலும், வில்லியாக வரலக்‌ஷ்மி சரத்குமார் மிரட்டி உள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வீர சிம்ஹா ரெட்டி இன்று முதல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

என்டர்டெயின்மென்ட்டுக்கு கியாரண்டி

என்டர்டெயின்மென்ட்டுக்கு கியாரண்டி

சும்மா சுமோ எல்லாம் பறக்க டபுள் ஆக்‌ஷனில் பாலய்யா நடித்துள்ள மாஸ் மசாலா படமான வீர சிம்ஹா ரெட்டி ஓடிடி ரசிகர்களை இந்த வாரம் நிச்சயம் என்டர்டெயின் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகண்டா திரைப்படம் ஓடிடியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. வாரிசு மற்றும் வீர சிம்ஹா ரெட்டி என இரு படத்துக்கும் தமன் தான் பின்னணி இசையை பிரித்து மேய்ந்துள்ளார்.

ஜப்பானிய படம்

ஜப்பானிய படம்

அப்படியே அந்த பக்கம் நம்ம நெட்பிளிக்ஸை பார்த்தால், இயக்குநர் ரிகியா இமைசுமி இயக்கத்தில் கசிமி அரிமுரா நடிப்பில் உருவாகி உள்ள கால் மீ சிஹிரோ எனும் ஜப்பானிய திரைப்படம் ஆங்கிலத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 23ம் தேதி வெளியாகி உள்ளது. மேலும், பிரைம் வீடியோவில் டை ஹார்ட் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X