OTT Release : பதான் உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ்.. ரசிகர்களுக்கு செம விருந்து!

சென்னை: இந்த வாரம் ஓடிடியில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாள மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியீட்டுக்காக தயாராக உள்ளன.

திரையரங்கில் வெளியாகி உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்த ஷாருக்கனின் பதான் படமும்,சசிக்குமார் நடித்த அயோத்தி, வாணிபோஜன் நடித்த செங்களம் வெப் தொடர் வெளியாக உள்ளது.

ZEE5, அமோசான், சோனி லிவ் , நெட்பிளிக்ஸ் என அனைத்து ஓடிடி தளங்களும் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றன.

பதான் (தமிழ்)

பதான் (தமிழ்)

நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த பதான் இந்தித் திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இத்திரைப்படம், மார்ச் 22 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக உள்ளது. பாலிவுட் மட்டுமின்றி இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் இத்திரைப்படத்தை பார்க்கலாம்.இப்படத்தில் ஷாருக்கான் பதான் என்ற ரா ஏஜெண்டாக நடித்துள்ளார்.

அயோத்தி (தமிழ்)

அயோத்தி (தமிழ்)

ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகி உள்ள அயோத்தி படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். சசிகுமார்,குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் மார்ச் 3ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், மார்ச் 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

செங்களம் (வெப் தொடர்)

செங்களம் (வெப் தொடர்)

கலையரசன், வாணி போஜன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள செங்களம் இணையத்தொடர் மார்ச் 24 தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது.அபி & அபி எண்டர்டெயின்மன்ட் பிரைவேட் லிமிட்டெட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் தயாரித்துள்ளார்.

Chor Nikal Ke Bhaga (இந்தி)

Chor Nikal Ke Bhaga (இந்தி)

யாமி கெளதம் மற்றும் சன்னி கௌஷல் நடித்த 'சோர் நிகல் கே பாகா' புதிய திரைப்படம் நெட்ஃபிக்ஸ் மார்ச் 24ந் தேதி வெளியாக உள்ளது. ஆக்‌ஷன், த்ரில்லர் கதை அம்சத்தைக் கொண்ட இத்திரைப்படத்தில், கடனை அடைக்க, ஒரு விமானப் பணிப்பெண் தனது காதலனுடன் இணைந்து விலைமதிப்பில்லா வைரத்தை கொள்ளை அடிக்கதிட்டம் போடுகின்றனர். இறுதியில் இவர்கள் கொள்ளையடித்தார்களே இல்லையா என்பதுதான் படத்தின் கதை

De Dhakka 2 (இந்தி)

De Dhakka 2 (இந்தி)

பிரதாப் பாட் எழுத்தில் மகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் சுதேஷ் மஞ்ச்ரேக்கர் அகியோர் இணைந்து இயக்கிய 'தே தாக்கா 2' திரைப்படம். இதில் பார்தி அச்ரேக்கர், ஆனந்த் இங்கிள், மகரந்த் அனஸ்புரே மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை யதின் ஜாதவ், ஸ்வாதி கோப்கர் தயாரித்துள்ளார். தே தாக்கா 2 படத்திற்கு அஜய் லோபோ இசையமைத்துள்ளார். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 24ந் தேதி முதல் பார்க்கலாம்

Purusha Pretham (மலையாளம்)

Purusha Pretham (மலையாளம்)

புருஷா ப்ரேதம் மலையாள கிரைம் மற்றும் காமெடி திரைப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் மார்ச் 24ந் தேதி வெளியாக உள்ளது. இயக்குநர் கிரிஷாந்த் இயக்கிய இப்படத்தில், விசித்திரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் நபர்களை குழுவை மையமாகக் கொண்ட திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது.

தி நைட் ஏஜென்ட் (ஆங்கிலம்)

தி நைட் ஏஜென்ட் (ஆங்கிலம்)

கேப்ரியல் பாஸோ நடித்த தி நைட் ஏஜென்ட் தொடரை நெட்ஃபிக்ஸ் 24ந் தேதி ஓடிடி தளத்தில் பார்க்கலாம். மேத்யூ குயிர்க்கின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தொடர் ஷான் ரியான் இயக்கி உள்ளார். வெள்ளை மாளிகையில் பணிபுரியும் எஃப்.பி.ஐ அதிகாரியை மையமாக வைத்து ஆக்ஷன் மற்றும் திரில்லர் தொடராக உருவாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X