படம் பார்க்க ரெடியா.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. வரிசையாக காத்திருக்கும் படங்கள்!

சென்னை : ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வந்துள்ளது என்று பார்க்கலாமா?

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியானதும், அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கிய காலம் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது வீட்டிலேயே, அதுவும் உட்கார்ந்த இடத்திலேயே நமக்கு பிடித்த படங்களை ஓடிடியில் பார்த்து வருகிறோம்.

மக்களின் இந்த பல்சை நன்கு தெரிந்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள் வாரா வாரம் புதுபுதுப்படங்களை வெளியிட்டு வருகின்றன.

Black Panther : Wakanda forever

Black Panther : Wakanda forever

நவம்பர் மாதம் Black Panther : Wakanda forever வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் இன்று முதல் வெளியாகி உள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஆங்கிலம், இந்தி,தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் காணலாம். த்ரில்லிங் காட்சிகள் நிறைந்த இந்த Black Panther : Wakanda forever படத்தை கெவின் ஃபைஜ் மற்றும் நேட் மூர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Jehanabad: Of Love & War

Jehanabad: Of Love & War

Jehanabad: Of Love & War என்ற வெப் தொடர் பிப்ரவரி 3ந் தேதி முதல் Sony LIV- ல் வெளியாக உள்ளது. 2005ம் ஆண்டு ஜெகனாபாத்தில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இக்கதை நகர்கிறது. இதில், ரித்விக் பௌமிக், பரம்பிரதா சாட்டர்ஜி மற்றும் ஹர்ஷிதா கவுர் ஆகியோர் நடித்துள்ளனர். பீகாரில் உள்ள ஒரு கிராமத்தை சுற்றியே கதை நகர்கிறது.

ஃபார்ஸி (வெப் தொடர்)

ஃபார்ஸி (வெப் தொடர்)

தி பேமிலி மேன் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே அடுத்து இயக்கியுள்ள வெப் தொடர் தான் 'ஃபார்ஸி'. க்ரைம் த்ரில்லர் தொடரான இதில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா, புவன் அரோரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாக உள்ளது.

செம்பி

செம்பி

இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் செம்பி. கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். தனது 10 வயது பேத்தி செம்பிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு, நீதி கேட்கும் வீரத்தாயாகவும் பழங்குடியினப் பெண்ணாகவும் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார். இப்படம், பிப்ரவரி 3 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

அயலி (வெப் தொடர்)

அயலி (வெப் தொடர்)

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் அயலி. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ5 ஓடிடியில் கடந்த வாரம் ஜனவரி 26ந் தேதி வெளியான இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்த தொடரை பார்க்காதவர்கள் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X