OTT Release This week: ஆர்யன் முதல் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5 வரை.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்!

சென்னை: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான 'பைசன்', ஹரீஸ் கல்யாண் நடித்த 'டீசல்', விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்த நடுசென்டர், 'தி ஃபேமிலி மேன்' உள்ளிட்டவை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாக திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆர்யன்: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான 'ஆர்யன்' கடந்த மாதம் தியேட்டரில் வெளியான நிலையில், வரும் 28 ந் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் ஜனரில் உருவான இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் தியேட்டரில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

காந்தாரா சாப்டர் 1(இந்தி): ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் , கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ஈஸ்வரா பூந்தோட்டம் என்ற தெய்வ சக்தி கொண்ட இடத்தை அடைய பல குழுக்கள் முயற்சி செய்கின்றனர். இதனால், நடக்கும் போரில் காந்தாரா மக்களை அந்த தெய்வம் காப்பாற்றியது இப்படத்தின் கதை. வசூலை சாதனைப்படைத்த இப்படம் அமேசான் பிரைம் வீடியோ அக்டோபர் 31ந் தேதி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய தேதிகளில் வெளியாக நிலையில், வரும் 27ந் தேதி இப்படத்தின் இந்தி பதிப்பு அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

This week OTT OTT movie
Photo Credit:

தி கேர்ள் பிரண்ட்: ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான 'தி கேர்ள் பிரண்ட்' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளியது. பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இதில், ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். மேலும், ராகுல் ரவீந்திரன், ராவ் ரமேஷ், அனு இமானுவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 11-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி: வருண் தவான் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காதல் நகைச்சுவை திரைப்படம் தான் 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி'. ஷஷாங்க் கைதன் இயக்கிய இப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும், வசூல் ரீதியாகவும், இந்தப் படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி படம் வருகிற நவம்பர் 27 ந் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில், சன்யா மல்ஹோத்ரா மற்றும் ரோஹித் சரப் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் மணீஷ் பால், அக்‌ஷய் ஓபராய் மற்றும் அபினவ் சர்மா ஆகியோர் துணை வேடங்கலும் நடித்துள்ளனர்.

This week OTT OTT movie
Photo Credit:

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5: ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 4வது சீசன் வெற்றியைத் தொடர்ந்து ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் 5வது சீசன் முதல் பகுதி நவம்பர் 26ந் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. அது நான்கு அத்தியாயங்கள் கொண்ட தொடராக இருக்கும், அதைத் தொடர்ந்து, டிசம்பர் 25ந் தேதி மூன்று அத்தியாயங்கள் வெளியிடப்படும். இறுதியாக டிசம்பர் 31ந் தேதி இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது.

பார்ன் ஹங்கிரி: இந்தியாவைச் சேர்ந்த ஒரு அனாதை, ஒரு சிறந்த சமையல்காரராக மாறிய சாஷ் சிம்ப்சனின் நிஜ வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து 'பார்ன் ஹங்கிரி' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பாரி அவ்ரிச் இயக்கிய இந்த படத்தை, நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தயாரித்துள்ளார். 'பார்ன் ஹங்கிரி' அவணத்திரைப்படம் நவம்பர் 28ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த ஆவணப்படம் 2024 ஆம் ஆண்டு பாம் ஸ்பிரிங்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X