Ott release: புஷ்பா 2 பார்த்தாச்சா?.. இந்த வீக்கெண்டுக்கு ஓடிடியில் இந்த படங்களை மிஸ் செய்யாதீங்க!

சென்னை: இந்த வாரம் சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட் படமான புஷ்பா 2 வெளியாகி உள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில் இந்த வார ஓடிடி திரைப்படங்களையும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் அமரன் உள்ளிட்ட படங்கள் இந்த வார ஓடிடியில் வெளியாகியுள்ளன. ஓடிடியில் மற்ற மொழி படங்களையும் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

sivakarthikeyan amaran movie this week ott

ரசிகர்களின் கொண்டாட்டம்: தனக்காகவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஓடி ஆடி சம்பாதிக்கும் மக்களுக்கு என்டர்டைன்மென்ட் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது/ அந்த வகையில் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் முதலிடத்தில் சினிமாக்களே மக்களின் குதுகலத்திற்கு காரணங்களாக அமைந்து வருகின்றன/ அந்த வகையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் திரைப்படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்து அவர்களின் உற்சாகங்களுக்கும் காரணங்களாக உள்ளன. இதில் பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட், பெரிய ஹீரோ, வளர்ந்து வரும் ஹீரோ என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் கதைக்களத்தில் சிறப்பாக அமையும் படங்கள் சூப்பர்ஹிட்டாகி வருகின்றன.

ஓடிடி ரிலீஸ் படங்கள்: கடந்த கொரோனா காலத்தில் நமக்கெல்லாம் கிடைத்த கொடையாக ஓடிடி காணப்படுகிறது. சினிமாவிற்கு இணையான வரவேற்பை ஓடிடி தளங்கள் பெற்று வருகின்றன. திரையரங்குகளில் படங்கள் ரிலீசானாலும் சில தினங்களிலேயே ஓடிடியிலும் காணக் கிடைப்பதால் திரையரங்கில் பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த ஓடிடி தளங்கள் காணப்படுகின்றன. குறைவான முதலீட்டில் நாம் பார்க்க விரும்பும் அனைத்து படங்களையும் இவற்றில் பார்த்துவிடலாம் என்பதே இதன் சிறப்பு. இவற்றில் கிளாசிக் படங்கள், சூப்பர் ஹிட் படங்கள், புதிதாக ரிலீசான படங்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் இருப்பதும் ஓடிடியின் பலம்.

இந்த வார ஓடிடி படங்கள்: இந்த வாரம் திரையரங்குகளில் நேற்றைய தினம் புஷ்பா 2 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் படத்தை கொண்டாடவே செய்கின்றனர். இந்நிலையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நேற்றைய தினம் சிவகார்த்திகேயனின் அமரன், சார் மற்றும் லிட்டில் ஹார்ட்ஸ் படங்கள் தமிழில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டெண்ட்கொட்டா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. இவற்றில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் மிகப்பெரிய வரவேற்புடன் வெளியாகியுள்ளது.

மற்ற மொழிப் படங்கள்: தெலுங்கில் மட்கா, மந்திரா, பிரதர், நாருடி பிரதுக்கு நாட்டனா ஆகிய படங்களும் மலையாளத்தில் குவால்ப், ஃபேமிலி ஆகிய படங்களும் கன்னடத்தில் முர்ஃபி, மேட்னி ஆகிய படங்களும் இந்தியில் அக்னி, மேயிரி, தனாவ் 2, ஜிக்ரா ஆகிய படங்களும் ஓடிடியில் வெளியாகியுள்ளன. இதனிடையே நாளைய தினம் இந்தியில் விக் வித்யா காவோ வாலா வீடியோ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தவார ஓடிடியில் ஹாலிவுட்படங்களும் ஏராளமான வெளியாகியுள்ளன. ஸ்டார் வார்ஸ் ஸ்கெலட்டன் க்ரூ, ஆம்பர் அலர்ட், க்னீகேப், எக்சிபிஷன் ஃபர்கிவ்னெஸ் உள்ளிட்ட பல படங்கள் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வெளியாகவுள்ளன.

ஹாலிவுட் படங்கள்: இவற்றில் பல படங்கள் ரசிகர்கள் பார்ப்பதற்காக யோசித்து வைத்த படங்களாக உள்ளன. நாளைய தினமும் ஹாலிவுட்டின் சூப்பர்மேன் தி கிறிஸ்டோபர் ரீவ் ஸ்டோரி ஆவணப்படமும் வெளியாகவுள்ளது. ஆங்கில படங்களை அதிகமாக பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த வாரம் கொண்டாட்டமான வாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படங்கள் இந்த வாரயிறுதி கொண்டாட்டத்தில் ரசிகர்களை வெகு சிறப்பாக என்டர்டெயின் செய்யும் என்றும் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X