இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட் வந்தாச்சு.. என்னென்ன படங்கள்னு பாக்கலாமா!
சென்னை : திரையரங்குகளில் தொடர்ந்து தங்களது விருப்பத்திற்குரிய படங்களை பார்க்க முடியாதவர்களின் சொர்க்கமாக மாறியுள்ளது ஓடிடி தளங்கள்.
தாங்கள் பார்க்க விரும்பும் ஆனால் குடும்பத்தினருடன் திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத படங்களை ஓடிடி தளங்கள் மூலம் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.
குறைந்த கட்டணங்களில் மாதம் முழுவதும் அல்லது ஆண்டு முழுவதும் எத்தனை படங்களையும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வது ஓடிடி தளங்களின் சிறப்பு.

திரையரங்க ரிலீஸ் படங்கள்
திரையரங்குகளில் சென்று படங்களை பார்ப்பது என்பது மிகவும் சிறப்பான அனுபவத்தை ரசிர்களுக்கு தரும் விஷயம். தான் கனவுலகில் கண்டு களித்த ஒரு சில விஷயங்களை திரையரங்கின் பிரம்மாண்டத்துடன் பார்க்கும் வசதி ரசிகர்களுக்கு காணப்படுகிறது. தொடர்ந்து தனது விருப்பத்திற்குரிய நாயகனின் படங்களை திரையரங்குகளில் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

திரையரங்க கட்டணங்கள்
ஆனால் சமீப காலங்களில் திரையரங்குகளில் படம் பார்ப்பது -அதிலும் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 1000 முதல் 2000 ரூபாய் வரையில் செலவு பிடிக்கிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு குடும்பத்தை ஓட்டும் நடுத்தர மக்களுக்கு இது எட்டாக்கனியாகவே உள்ளது.

ஓடிடி தளங்கள்
இந்நிலையில் அவர்களின் ஏக்கங்களை பூர்த்தி செய்யும் வகையில் வரப்பிரசாதமாக வந்துள்ளது ஓடிடி தளங்கள். தனக்க பிடித்த நடிகனின் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் தனக்கு விருப்பமான நேரத்தில் பார்த்துக் கொள்ளும் வசதியை இந்த ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு கொடுக்கின்றன.

ரசிகர்களின் வரவேற்பு
நேரடியாகவோ, திரையரங்க ரிலீசுக்கு பின்போ புதிய படங்கள் இந்த ஓடிடி தளங்களில் வெளியாவது கூடுதல் சிறப்பு. இதனால் குறைந்த கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் அல்லது வருடம் முழுமைக்கும் தனக்கு பிடித்த படங்களை குடும்பத்தோடு ரசிகர்கள் கண்டு களிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.

திரையரங்க ரிலீஸ் படங்கள்
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் படங்கள் ரிலீசாகி வரும் நிலையில், அதற்கு சமமாக ஓடிடியிலும் படங்கள் ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பான படங்கள் ரிலீசாக உள்ளன. ஓட்டு, தெக்கன் தள்ளு கேஸ், பாத்தோன்பதம் நூட்டண்டு மற்றும் பிரம்மாஸ்திரா போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.

ஓடிடி ரிலீஸ் படங்கள்
இதனிடையே ஓடிடியிலும் வரும் 9ம் தேதி அதிகமான படங்கள் ரிலீசாக உள்ளன. மலையாளத்தில் பாப்பன், தள்ளுமாலா, வைஃப் ஈஸ் பியூட்டிபுல், நா தான் கேஸ் கொடு உள்ளிட்ட படங்கள் முறையே ஜீ5, நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் தளங்களில் வெளியாகவுள்ளன.

அமேசானில் வெளியாகும் சீதாராமம்
இதனிடையே இந்தியில் ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படம் நெட்பிளிக்சிலும் தெலுங்கில் 7 டேஸ் 6 நைட்ஸ் படம் ஆஹாவிலும் தோர் லவ் அண்ட் தண்டர் ஹாலிவுட் படம் ஹாட்ஸ்டாரிலும் நார்கோ செயிண்ட் என்ற கொரியன் படம் நெட்பிளிக்ஸ் சீரிசிலும் வெளியாகவுள்ளது. இதனிடையே திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ள சீதாராமம் படம் அமேசானில் வெளியாகவுள்ளது.

அதிகமான மலையாள படங்கள்
இந்த வாரம் ஓணம் பண்டிகையையொட்டி அதிகமான மலையாளப் படங்கள் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகவுள்ளன. மலையாள படங்களுக்கு தமிழ் உள்ளிட்ட மற்ற ரசிகர்களும் அதிகமான காணப்படும் நிலையில், இந்தப் படங்கள் அதிகமான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











