இந்த வார ஓடிடி படங்கள் பத்தி பாக்கலாமா... மலையாளத்துல 4 படங்கள் ரிலீசாக இருக்கு!

சென்னை : வாரா வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரமும் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என சிறப்பான படங்கள் பல நேரடியாகவும் திரையரங்க ரிலீசுக்கு பின்பும் ஓடிடியில் ரிலீசாக உள்ளன. அந்தப் படங்கள் குறித்து பார்க்கலாம்.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடி ரிலீஸ் படங்கள்

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஓடிடி பிளாட்பார்ம் மிகவும் சிறப்பாகவே காணப்படுகிறது. திரையரங்குகளில் படங்களை பார்ப்பதை போலவே தற்போது ஓடிடியிலும் படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களின் ஆர்வத்திற்கு பிரபல ஓடிடி தளங்கள் தீனி போட்டு வருகின்றன.

ஹே சினாமிகா படம்

ஹே சினாமிகா படம்

அந்த வகையில் இந்த வாரம் ஹே சினாமிகா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 31ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தை பிருந்தா மாஸ்டர் இயக்கியிருந்தார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படமாக இது உள்ளது.

ராதே ஷ்யாம் படம் ரிலீஸ்

ராதே ஷ்யாம் படம் ரிலீஸ்

அடுத்ததாக இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ராதே ஷ்யாம் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை ஈர்க்காத நிலையில் தற்போது விரைவிலேயே ஓடிடியில் வெளியாகவுள்ளது.

4 மலையாள படங்கள்

4 மலையாள படங்கள்

இந்த வாரத்தில் 4 மலையாள படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன. மம்முட்டியின் பீஷ்மா பர்வம் படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இதேபோல மெம்பர் ரமேஷான் 9 ஏஎம் வார்ட் படம் ஜீ5ல் வெளியாக உள்ளது. படா மற்றும் வெயில் படங்களும் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளன.

தெலுங்கிலும் ஓடிடி ரிலீஸ்

தெலுங்கிலும் ஓடிடி ரிலீஸ்

இதேபோல தெலுங்கில் ஆடவாலு மீக்கு ஜோக்கர்லு படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. சர்வானந்த், ராதிகா, குஷ்பூ உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X