இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீசாக இருக்குன்னு பாக்கலாமா.. அட நம்ம டான் படமும் வெளியாகுதா?

சென்னை : திரைத்துறையின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ளது ஓடிடி தளங்கள்.

ஒவ்வொரு வாரமும் சிறப்பான படங்களை இந்தத் தளங்கள் மூலம் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்த வாரம் என்னென்ன படங்கள் எந்தெந்த தளங்களில் ரிலீசாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சினிமா காதலர்கள்

சினிமா காதலர்கள்

ஒரு கால கட்டம் இருந்தது. நீண்ட தூர பயணம் மேற்கொண்டு, திரையரங்குகளில் ரசிகர்கள் படங்களை பார்த்த காலம் அது. அப்படி பார்ப்பதற்காக வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் சினிமா காதலர்கள் போய் பார்ப்பார்கள். இந்த வாய்ப்பு பெண்களுக்கு குறைவாகவே இருந்தது.

அதிகரித்த திரையரங்குகள்

அதிகரித்த திரையரங்குகள்

சினிமாவிற்கு மக்களிடையே காணப்பட்ட வரவேற்பை தொடர்ந்து திரையரங்குகள் அதிகரித்தன. இதையடுத்து மக்கள், குடும்பத்தினருடன் திரைப்படங்களை பார்க்க முடிந்தது. அதிலும் தீபாவளி, பொங்கல் ரிலீஸ் என குடும்பத்துடன் படம் பார்ப்பது குறைவாகவே இருந்தது.

அதிகரித்த ரசிகர்கள்

அதிகரித்த ரசிகர்கள்

தொடர்ந்து மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் உள்ளிட்டவை மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் சினிமா ரசிகர்களை அதிகமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க வைத்தது. இதில் கண்டிப்பாக குடும்பத்தினருடன் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தனியாக செல்பவர்களும் அதிகரித்தே காணப்பட்டனர்.

ஓடிடி தளங்கள்

ஓடிடி தளங்கள்

இந்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேறிய நிலையாக தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது ஒடிடி தளங்கள். இந்தத் தளங்களில் நமது விருப்பத்திற்குரிய மற்றும் விருப்பத்திற்குரிய நாயகர்களின் படங்களை பார்ப்பதற்காக குறைவான கட்டணங்களை செலுத்தினால் போதும் என்பதே இந்த தளங்கள் கொடுக்கும் சிறப்பான விஷயம்.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

இந்த வார ஓடிடி ரிலீஸ்

கொரோனா காலகட்டம் அனைவருக்கும் கடினமாக அமைந்த நிலையில், சினிமா காதலர்களுக்கு சிறப்பாக அமைய இந்த ஓடிடி தளங்கள் காரணமாக அமைந்தன. இந்நிலையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தமிழில் டான் படம் வரும் ஜூன் 10ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.

டான் படம்

டான் படம்

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது. கல்லூரி மாணவராக அவர் இந்தப் படத்தில் நடித்திருந்த நிலையில், படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் எட்டியுள்ளது. 100 கோடி ரூபாய் கிளப்பில் படம் இணைந்துள்ளது. தொடர்ந்து படத்தை ரசிகர்களை கொண்டாடினர்.

4 மலையாள படங்கள்

4 மலையாள படங்கள்

இதனிடையே படம் ஓடிடியில் வெளியாவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான செய்தியாகவே அமையும். அடுத்ததாக ஜூன் 10ம் தேதி 4 மலையாளப் படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. ட்வெண்டி ஒன் கிராம்ஸ் படம் ஹாட்ஸ்டாரிலும், இன்னாலே வாரே படம் சோனி லைவ்விலும், பத்ரோசின்ட படப்புகள் படம் ஜீ5விலும் வெளியாக உள்ளது.

சிபிஐ 5 : தி ப்ரெயின்

சிபிஐ 5 : தி ப்ரெயின்

மும்முட்டியின் நடிப்பில் சிறப்பான வெளியீடாக கடந்த மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான சிபிஐ 5 : தி ப்ரெயின் படமும் வரும் ஜூன் 10ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இந்தப்படம் தமிழகத்தில் குறைவான திரையரங்குகளிலேயே வெளியான நிலையில், ஓடிடியில் ரிலீசாகும் பட்சத்தில் அதிகமான ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Recommended Video

அட சண்டாளா ! சூரி செம கலாய் |Soori Speech | Don Success Meet *Kollywood | Filmibeat
ஹாலிவுட் படம் ரிலீஸ்

ஹாலிவுட் படம் ரிலீஸ்

இதனிடையே தெலுங்குப்படமான கின்னராசினி படமும் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து இந்தியில் தி ப்ரோக்கன் நியூஸ் வெப் தொடர் மற்றும் ஆர்த் படமும் வெளியாகவுள்ளது. ஹாலிவுட்டின் ஹசல் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இந்த வாரம் அதிகமான படங்கள் வெளியாகவுள்ள நிலையில் ஓடிடி ரசிகர்கள் இதனை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X