ஓடிடியிலும் அதிரடி காட்ட தயாராகும் விக்ரம்.. இந்த வார ஓடிடி லிஸ்ட் பார்க்கலாமா!
சென்னை : ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் சிறப்பான பல படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
Recommended Video
அந்த வகையில் இந்த வாரமும் பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதில் ஜூலை 8ம் தேதி கமல்ஹாசனின் விக்ரம் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது ரசிகர்களை மிகுந்த ஆர்வம் கொள்ள செய்துள்ளது.

ஓடிடி ரிலீஸ்
இந்த டிஜிட்டல் உலகில் ஓடிடி என்பது அனைத்து தரப்பினருக்கும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் திரையரங்கில் சென்று படம் பார்ப்பதற்கு 1000 ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலையில், அடிக்கடி திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு இயலான விஷயம்.

சிறப்பான வசதி
பணத்தை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் வசதி படைத்தவர்களும் இதற்கான நேரத்தை ஒதுக்க முடியாத சூழலில் ஓடிடியில் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படங்களை நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களில் பார்த்துக் கொள்ளும் வசதியை இந்த ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு தருகின்றன.

ஓடிடியில் அதிரடி படங்கள்
மேலும் குறைந்த கட்டணத்தில் நிறைவான படங்களை அது புதிய படங்களாக இருந்தாலும், பழைய கிளாசிக் வரிசை படங்களாக இருந்தாலும் இதில் பார்த்துக் கொள்ள முடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு வாரமும் திரையரங்குளில் சிறப்பான பல படங்கள் வெளியாகி வருவதை போலவே ஓடிடியிலும் அதிரடி படங்கள் ரிலீசாகி வருகின்றன.

விக்ரம் ஓடிடியில் ரிலீஸ்
அந்த வகையில் இந்த வாரம் ஜூலை 8ம் தேதி திரையரங்குகளில் ஒரு மாதத்தை கடந்த வசூல்வேட்டை நடத்திவரும் கமல்ஹாசனின் விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு திரையரங்குகளிலேயே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் காணப்பட்ட நிலையில், ஓடிடியிலும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நானி -நஸ்ரியா படம்
இதையடுத்து இந்த வாரம் ஓடிடியில் அண்டே சுந்தரானிகி படம் ரிலீசாகவுள்ளது. நானி, நஸ்ரியா நடிப்பில் தெலுங்கு, தமிழில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்ற இந்தப் படம் தற்போது நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இதேபோல மாடர்ன் லவ் ஐதராபாத், மேஜர் தெலுங்கு படங்களும் வெளியாகியுள்ளன.

மலையாளத்திலும் படங்கள்
மலையாளத்தில் பக்கா மற்றும் குஞ்சல்தோ படங்கள் முறையே சோனி லைவ் மற்றும் ஜீ5 தளங்களில் வெளியாகவுள்ளன. இதனிடையே இந்தியில் சாஸ் பஹு அச்சார் பிரைவேட் லிமிட்டெட் என்ற வெப் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது. ஹாலிவுட்டின் ரன்வீர் vs வைல்ட் வித் பியர் கிரில்ஸ் என்ற படமும் நெட்பிளிக்சில் இந்த வாரம் வெளியாகவுள்ளது.

சாய் பல்லவியின் விரட்டப்பர்வம்
தெலுங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற சாய் பல்லவி, ராணா நடிப்பில் உருவான விரட்டப்பர்வம் படமும் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. இதேபோல கீர்த்தி சுரேஷின் சொந்த தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான மலையாள படமான வாஷியும் ஜூலை 17 முதல் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











