ஒவ்வொரு வாரமும் களைகட்டும் ஓடிடி ரிலீஸ் படங்கள்... இந்த வாரம் என்னென்ன படங்கள்னு பாக்கலாமா?
சென்னை : கொரோனா தந்த சிறப்பான விஷயத்தில் ஒன்றாக பார்க்கப்படுகிறது ஓடிடி. கொரோனா காலத்தில் வெளியில் செல்ல முடியாமல், திரையரங்குகளிலும் கட்டுப்பாடுகள் நிலவிய நிலையில், சினிமா ரசிகர்களுக்கு சிறப்பாக கைக்கொடுத்தது ஓடிடி.
அந்த வகையில் தொடர்ந்து ஓடிடி திரைத்துறையில் ஆதிக்கம் செய்து வருகிறது. அதிகமான ஓடிடி தளங்கள் தற்போது துவங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் நேரடியாகவும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட பின்பும் என படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. திரையரங்குகளுக்கு சென்று அனைத்துப் படங்களையும் பார்க்க முடியாத ரசிகர்களுக்கு இந்த ஓடிடி ஒரு வரப்பிரசாதமாக காணப்படுகிறது.

ஓடிடி தளங்கள்
ஓடிடி தளங்களுக்கு மாதத்தில் அல்லது வருடத்திற்கு என்று கட்டணம் செலுத்திவிட்டு ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான ஹீரோகக்ளின் படங்களை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் அந்தப் படங்கள் அவர்களை எந்தவகையில் கவர்கிறது என்ற அப்டேட்டும் உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

சிறப்பான ஓடிடி
ஓடிடியில் மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களையும் ரசிகர்கள் பார்க்க முடிகிறது. திரையரங்கில் பார்த்த பின்பும் மீண்டும் மீண்டும் தங்களுக்கு தேவையான நேரங்களில் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது ஓடிடி தளங்கள். சிறிய அளவில் கட்டணத்தை செலுத்திவிட்டு விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் படங்களையும் இதன்மூலம் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

ஓடிடியில் ஆர்ஆர்ஆர் ரிலீஸ்
இந்நிலையில் இந்த வாரத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கடந்த பிப்ரவரியில் திரையரங்குகளில் ரிலீசான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் இந்த வாரத்தில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. ஜீ5 ஓடிடி தளத்தில் இந்தப் படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. திரையரங்குகளில் மிரட்டலான அனுபவத்தை கொடுத்த இந்தப் படம் தொடர்ந்து திரையரங்குகளிலும் வெற்றிகரமான ஓடி வருகிறது.

ஆச்சார்யா ரிலீஸ்
இதேபோல சிரஞ்சீவி, ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற ஆச்சார்யா படமும் வரும் 20ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தெலுங்கில் வெளியான பாலதண்டனா படமும் 20ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது.

மோகன்லாலின் 12வது மேன் படம்
அசோக வனம்லோ அர்ஜூன கல்யாணம் தெலுங்கு படம் வரும் 27ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மோகன்லால் நடிப்பில் ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியான 12வது மேன், ஜெர்சி உள்ளிட்ட படங்களும் இந்த வாரத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளன. டிஸ்னியின் சிப் அண்ட் டேல் ரெஸ்க்யூ ரேஞ்சர்ஸ் அனிமேஷன் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

பயணிகள் கவனிக்கவும் படம்
இந்நிலையில் கேஜிஎப் சாப்டர் 2 படமும் அமேசான் பிரைமில் சிறப்பு கட்டணத்துடன் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பயணிகள் கவனிக்கவும் படமும் மே 29ல் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஜான் ஆப்ரஹாமின் அட்டாக் படமும் வரும் 27ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2 படங்கள் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தவை. இந்தப் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலையை சிறப்பாக குவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படங்களை ரசிகர்களின் வீட்டிற்கே கொண்டுவரும் இந்த ஓடிடி தளங்கள்மூலம் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்தப் படங்களை பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பது சிறப்பானது.


Click it and Unblock the Notifications











