இந்த வாரம் தியேட்டர்ஸ், ஓடிடி ரிலீஸ் அப்டேட்: ரசிகர்களோட எதிர்பார்ப்பு எந்த படத்துக்குன்னு பாருங்க

சென்னை: ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன.

ஓடிடி தளங்களில் சில படங்கள் நேரடியாகவும், சில படங்கள் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னரும், மேலும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன.

இந்த வாரம் மிக முக்கியமான படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகின்றன, அதேபோல் ஓடிடியிலும் சில படங்கள் வெளியாகின்றன.

ரசிகர்களின் முதல் விருப்பம்

ரசிகர்களின் முதல் விருப்பம்

திரையரங்குகளில் ரசிகர்களின் வருகையை அடிப்படையாக வைத்தே திரைத்துறையின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. அதேபோல், ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த படங்களைப் தியேட்டருக்கு சென்று பார்ப்பதையே முதல் விருப்பமாகக் கொண்டுள்ளனர். அதிலும் பிடித்த ஹீரோக்களின் படங்கள் என்றால், திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

இந்த வார ரிலீஸ்

இந்த வார ரிலீஸ்

ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. அதேபோல் இந்த வாரமும் சில முக்கியமான படங்கள் வெளியாகின்றன. தமிழில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் இந்த வாரம் ரிலீஸாகவில்லை. அதேநேரம் அதர்வா நடிப்பில் 'குருதி ஆட்டம்' திரைப்படம் 5ம் தேதி வெளியாகிறது. ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா ஆகியோர் நடித்துள்ள இப்படம், கபடி விளையாட்டை பின்னணியாகக் கொண்டு ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது.

ஜெய்யின் எண்ணித்துணிக

ஜெய்யின் எண்ணித்துணிக

நீண்ட வருடங்களாக சூப்பர் ஹிட் படம் கொடுக்க காத்திருக்கும் ஜெய் நடிப்பில் 'எண்ணித்துணிக' படம் இந்த வாரம் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள 'எண்ணித்துணிக' ஜெய்க்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சம்பத்குமார் இயக்கியுள்ள 'மாயத்திரை' படம், 5ம் தேதி வெளியாகிறது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'மஹா' திரைப்படம், 5ம் தேதி ஆஹா ஓடிடியில் ரிலீஸாகிறது.

துல்கர் சல்மானின் சீதா ராமம்

துல்கர் சல்மானின் சீதா ராமம்

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்துள்ள 'சீதா ராமம்' படம், 5ம் தேதி வெளியாகிறது. ஹனு ராகவபுடி இயக்கத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ரிலீஸாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், 5ம் தேதி ரிலீஸாகும் 'பிம்பிசாரா' படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், DC League of Super-Pets என்ற ஹாலிவுட் படமும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் விசுதா மெஜோ படம் வெளியாகிறது.

ஓடிடியில் இந்த வாரம்

ஓடிடியில் இந்த வாரம்

கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற பிருத்விராஜ்ஜின் 'கடுவா', வரும் 4ம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகிறது. மேலும், 'All Are Nothing', 'Crash Course' ஆகிய வெப் சீரிஸ்களும் அமேசானில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் 'The Sandman' வெப் சீரிஸ் ரிலீஸாகவுள்ளது. இவைகள் தவிர மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X