ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஓடிடி, திரையரங்க ரிலீஸ் படங்கள்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : திரையரங்குகளில் ஒரு பக்கம் அதிகமான படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி வருகிறது.
அனைத்து ஜானர்களிலும் சிறப்பான பல படங்கள் வெளியாகி எந்தப் படத்தை பார்ப்பது என்ற குழப்பத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது.
இது போதாதென்று ஓடிடியிலும் நேரடியாகவும் திரையரங்க ரிலீசுக்கு பிறகு ஏராளமான படங்கள் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

திரையரங்க ரிலீஸ் படங்கள்
வாரந்தோறும் திரையரங்குகளில் சிறப்பான பல படங்கள் வெளியானவண்ணம் உள்ளன. கொரோனா காரணமாக ஒரு காலகட்டத்தில் திரையரங்குகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், பல படங்கள் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

வரவேற்பை பெற்றுவரும் ஓடிடி ரிலீஸ் படங்கள்
திரையரங்குகளில் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், ஓடிடியிலும் பல படங்கள் வெளியாகி தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகின்றன. ஓடிடியில் படங்களை விருப்பப்பட்ட நேரங்களில் விருப்பப்பட்ட இடங்களில் பார்த்துக் கொள்ளும் வசதி உள்ளதால் ரசிகர்களிடம் ஓடிடி தளங்களுக்கு வரவேற்பு காணப்படுகிறது.

அருள்நிதியின் டி பிளாக் படம்
இந்த வாரமும் பல படங்களில் ஓடிடியில் வெளியாகவுள்ளன. சில படங்கள் நேரடியாகவும், சில படங்கள் திரையரங்குகளில் ரிலீசான சில தினங்கள் கழித்தும் வெளியாகவுள்ளன. இந்தப் படங்களில் சில படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அருள்நிதியின் டி பிளாக் போன்ற படங்களின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மாதவனின் ராக்கெட்ரி படம்
வரும் ஜூலை 26ம் தேதி மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கெட்ரி படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இதேபோல, 29ம் தேதி வூட் தளத்தில் 777சார்லி, ஹாட்ஸ்டாரில் குட் லக் ஜெர்ரி மற்றும் 191ஏ போன்ற படங்கள் வெளியாகவுள்ளன.

ஜான்வியின் குட் லக் ஜெர்ரி படம்
இதில் ஜான்வி கபூரில் நடிப்பில் வெளியாகவுள்ள குட் லக் ஜெர்ரி, தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்காக உருவாககியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் பேப்பர் ராக்கெட் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

டி பிளாக் படத்திற்கு எதிர்பார்ப்பு
தொடர்ந்து, அருள்நிதியின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான த்ரில்லர் படம் டிபிளாக் மற்றும் வட்டம் படங்களும் இந்த மாதத்திலேயே ஓடிடியில் வெளியாகவுள்ளன. இவற்றில் குட்லக் ஜெர்ரி, பேப்பர் ராக்கெட் மற்றும் டி பிளாக் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

திரையரங்குகளில் சிறப்பான படங்கள்
இதனிடையே திரையரங்குகளிலும் இந்த வாரத்தில் சிறப்பான படங்கள் ரிலீசாக உள்ளன. விக்ராந்த் ரோனா, தி லெஜண்ட் மற்றும் ஜோதி போன்ற படங்கள் வரும் ஜூலை 28ம் தேதியும், ஜூலை 29ல் சந்தானத்தின் குலுகுலு மற்றும் பேட்டரி படங்களும் வெளியாகவுள்ளன. ஆகஸ்ட் 4ம் தேதி எண்ணித் துணிக படம் ரிலீசாக உள்ளது.

குருதியாட்டம், காட்டேரி படங்கள் ரிலீஸ்
இதேபோல ஆகஸ்ட் 5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள சீதாராமம், குருதியாட்டம் போன்ற படங்கள் ரிலீசாகவுள்ளன. மேலும் லாஸ்ட் 6 ஹவர்ஸ், பொய்க்கால் குதிரை, காட்டேரி, புல்லட் ட்ரெயின், டிசி சூப்பர் பெட்ஸ் போன்ற படங்களும் ரிலீசாக உள்ளன. திரையரங்குகள் மற்றும் ஓடிடி என அடுத்தடுத்த வாரங்களில் சிறப்பான படங்களை வெளியிட உள்ளன.


Click it and Unblock the Notifications











