This week OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. மெய்யழகன் படத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே!

சென்னை: ஒவ்வொரு வாரமும் திரையரங்க ரிலீசுக்கு இணையாக ஓடிடியிலும் சிறப்பான படங்களை பார்க்க முடிகிறது. பட்ஜெட், நேரமின்மை காரணங்களால் திரையரங்குகளுக்கு சென்று தன்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களின் படங்களை பார்க்க முடியாத ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து வருகின்றன இத்தகைய ஓடிடி ரிலீஸ் படங்கள்.

அந்த வகையில் இந்த வாரமும் ஓடிடி ரிலீசான கார்த்தி -அரவிந்த் சாமி கூட்டணியில் வெளியான மெய்யழகன் உள்ளிட்ட படங்கள் மாஸாக வெளியாகவுள்ளன. திரையரங்குகளில் சென்று இந்தப் படங்களை பார்க்க முடியாத ரசிகர்கள், இப்போதே இந்தப் படங்களை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தேடத் துவங்கியுள்ளனர்.

ott release this week ott release meiyazhagan movie

ஓடிடி ரிலீஸ்: திரையரங்குகளில் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள். இளம் நடிகர்கள் வளர்ந்து வரும் நடிகர்கள் என நடிகர்களின் படங்கள் ரிலீசாகி வருகின்றன. இந்தப் படங்கள் திரையரங்குகளின் ரிலீசுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகி வருகின்றன. சில படங்கள் நேரடியாக ஓடிடியிலும் வெளியாவதுண்டு. திரையரங்குகளில் அதிகமான வசூல்வேட்டை நடத்தும் படங்கள் ஓடிடியிலும் அதிகமான கவனத்தை பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் திரையரங்குகளில் ரிலீசாகி மிக பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மெய்யழகன் படம்: இந்த படத்தை தொடர்ந்து இந்த வாரம் நடிகர் விமலின் சார் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இந்நிலையில் வரும் வாரம் அக்டோபர் 25ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் குறித்து தற்போது பார்க்கலாம். முதலில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இயக்குனர் பிரேம்குமாரின் மெய்யழகன் படம் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. நடிகர் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணியில் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருந்தபோதிலும் படம் படத்தின் நீளம் காரணமாக இந்த படம் ரசிகர்களை கவற தவறியது, இதையடுத்து 18 நிமிட காட்சிகளை படத்திலிருந்து படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.

மெய்யழகன் ஓடிடி ரிலீஸ்: இயக்குனர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை பேசும் கதைக்களத்தை இந்த படத்தில் கையாண்டு இருந்தார் இயக்குனர் பிரேம்குமார். இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வாரம் ரிலீசாகவுள்ளது. படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க முடியாத ரசிகர்கள் அடுத்ததாக ஓடிடியில் பார்க்க காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹிப் ஹாப் தமிழா ஆதி லீட் கேரக்டரில் நடித்திருந்த கடைசி உலகப்போர் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.

கடைசி உலகப் போர் படம்: இந்தப் படத்தை ஹிப் ஹாப் தமிழா ஆதியே இயக்கி ஹீரோவாவாகவும் நடித்திருந்த நிலையில், படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ஓடிடி ரிலீசுக்கும் படம் தயாராகியுள்ளது. இதனிடையே சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த செம்பம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான கோழிப்பண்ணை செல்துரை படம் வரும் அக்டோபர் 24ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, பிரிகிடா, ஏகன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை படம் பெற தவறிய நிலையில் அடுத்தததாக ஓடிடியில் ரசிகர்களை கவருமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐந்தாம் வேதம் ஓடிடி வெளியீடு: அடுத்ததாக மர்மதேசம் இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடரான ஐந்தாம் வேதம் வரும் அக்டோபர் 25ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சாய் தன்ஷிகா, தேவதர்ஷினி, சந்தோஷ் பிரதாப், பொன்வண்ணன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்த வெப் தொடர், தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இதையடுத்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இந்த வாரம் அதிகமான படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. தெலுங்கில் காளி படமும் மலையாளத்தில் சோல் ஸ்டோரீஸ், 1000 பேபீஸ் தொடர்களும் கன்னடத்தில் லாஃபிங் புத்தா படமும் வெளியாகவுள்ளது.

அடுத்தடுத்த மொழிகளில் ஓடிடி வெளியீடு: ஹிந்தியில் கிரிஸ்பி ரிஷ்தே படமும் இந்த வார ஓடிடி ரிலீஸாக வெளியாக உள்ளன. ஹாலிவுட்டில் லாங்லெக்ஸ், ரிவல்ஸ், ஆலன் ரோமுலஸ் உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளன. தீபாவளியை ஒட்டி அடுத்தடுத்து நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக வரவுள்ள நிலையில் தமிழில் அமரன், பிளடி பெக்கர், பிரதர் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவுள்ளன. திரையரங்குகளில் இந்த படங்களை பார்க்க ரசிகர்கள் அதிக விருப்பம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஓடிடியிலும் அதிகமான படங்கள் ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X