இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களை பார்க்கலாங்களா! வரிசையில சிறப்பான படங்கள் இருக்கு!

சென்னை : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

தற்போது ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளிலும் சிறப்பான படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

இந்தப் படங்கள் சில வாரங்கள் திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்துவிட்டு ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

கனவுகளை தொடரும் ரசிகர்கள்

கனவுகளை தொடரும் ரசிகர்கள்

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் படங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியாகி வருகின்றன. ரசிகர்களின் சிறப்பான என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டிரஸ் பஸ்டராக படங்கள் விளங்கிவரும் நிலையில், இந்தப் படங்களின்மூலம் தங்களது கனவுகளை நிழலாக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

வரப்பிரசாதமான ஓடிடி

வரப்பிரசாதமான ஓடிடி

சினிமாவில் ஒவ்வொரு படத்தையும் பார்க்கவே ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் அது எல்லாருக்கும் சாத்தியமாக அமையாது அந்த வகையில் ஓடிடி என்பது வரப்பிரசாதமாக தற்போது மாறியுள்ளது. தேவையான படங்களை, தேவையான நேரத்தில், விருப்பமான இடங்களில் பார்த்துக் கொள்ளும் வசதி இதன்மூலம் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

திரையரங்குகளில் திருச்சிற்றம்பலம் ரிலீஸ்

திரையரங்குகளில் திருச்சிற்றம்பலம் ரிலீஸ்

இந்நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் வரும் 18ம் தேதி திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் கடந்த ஜகமே தந்திரம் உள்ளிட்ட நான்கு படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

தனுஷுக்கு 3 நாயகிகள்

தனுஷுக்கு 3 நாயகிகள்

படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் என 3 கதாநாயகிகள் உள்ள நிலையில், படத்திற்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெயிலர் என வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஓடிடி ரிலீஸ் படங்கள்

ஓடிடி ரிலீஸ் படங்கள்

இதனிடையே இந்த வாரம் ஓடிடியிலும் சிறப்பான பல படங்கள் வெளியாகவுள்ளன. ஜீவி 2 படம் இந்த வாரம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனிடையே அருள்நிதியின் தேஜாவு, தமிழ் ராக்கர்ஸ் மற்றும் யானை படங்களும் முறையே சிம்ப்ளி சவுத், ஜீ5 மற்றும் சோனி லைவில் வெளியாகவுள்ளன.

மலையாளம், தெலுங்கிலும் சிறப்பு படங்கள்

மலையாளம், தெலுங்கிலும் சிறப்பு படங்கள்

இதனிடையே இந்த வாரம் மலையாளத்தில் இருந்து ஹெவன் என்ற படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தெலுங்கிலிருந்து ஹைவே படம் ஆஹாவில் வெளியாகவுள்ளது. இந்தியிலிருந்து துரங்கா மற்றும் ஷெர்தில் படங்கள் ஜீ5 மற்றும் நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளன.

ஹாலிவுட்டின் தி நெக்ஸ்ட் 365 டேஸ் படம்

ஹாலிவுட்டின் தி நெக்ஸ்ட் 365 டேஸ் படம்

கன்னடத்திலிருந்து பைராகி படமும் வரும் 19ம் தேதி வூட் செலக்டில் வெளியாகவுள்ளது. இதனிடையே ஹாலிவுட்டிலிருந்து தி நெக்ஸ்ட் 365 டேஸ் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளன. இந்த வாரம் அதிகமான படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மாதம் முழுவதும் படங்கள்

மாதம் முழுவதும் படங்கள்

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மட்டுமே அடுத்த ஒரு மாதத்தில் முன்னணி நாயகர்களின் வெற்றிப் படங்களை வெளியிடுகிறது. தனுஷின் திருச்சிற்றம்பலம் வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. தொடர்ந்து டைரி 26ம் தேதியும் விக்ரமின் கோப்ரா 31ம் தேதியும் ஆர்யாவின் கேப்டன் செப்டம்பர் 8ம் தேதியும், சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ம் தேதியும் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X