OTT release movies: இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்.. என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?
சென்னை: திரையரங்குகளில் ரிலீசாகும் படங்களுக்கு இணையான வரவேற்பை ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் பெற்று வருகின்றன.
ஒவ்வொரு வாரமும் நேரடியாகவோ திரையரங்க ரிலீசுக்கு பின்போ படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
அந்த வகையில் இந்த வாரமும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிகமான படங்கள் ரசிகர்களை கவரும்வகையில் வெளியாகவுள்ளன.

இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்: கொரோனா காலத்தில்தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கவனத்தை ஈர்த்தது ஓடிடி தளங்கள். குறைவான கட்டணங்களிலேயே அதிகமான படங்களை, தங்களது விருப்பத்திற்குரிய படங்களை பார்த்துக் கொள்ள முடியும், பழைய படங்களையும் பார்த்துக் கொள்ள முடியும் என்ற வசதியுடன், தங்களது விருப்பத்திற்குரிய இடங்களிலும் படங்களை, வெப் தொடர்களை பார்த்துக் கொள்ள முடியும் என்ற வசதியையும் இந்த ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு கொடுத்தது.
அந்த வகையில் முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமில்லாமல், சிறந்த கதையம்சத்துடன் வெளியான படங்களையும் இந்த தளங்கள்மூலம் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில் சிறப்பான இயக்குநர்களின் படங்களையும் சேர்த்துக் கொள்ள முடிகிறது. ஒவ்வொரு வாரமும் நேரடியாகவோ, திரையரங்க ரிலீசுக்கு பின்னரோ, இந்தத் தளங்களில் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
அந்த வகையில், இந்த வாரமும் சிறப்பான பல படங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளன. தமிழில் பாயும் ஒளி நீ எனக்கு, சிங்க், அஷ்வின்ஸ் போன்ற படங்கள் முறையே, சிம்ப்ளி சவுத், ஆஹா, நெட்பிளிக்ஸ் தளங்களில் வெளியாகவுள்ளன. இந்தியில் பவால் படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. தோ குபாரே மற்றும் ஆஷிகானா எஸ்4 போன்ற படங்களும் இந்தியில் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் சீரில் தளங்களில் வெளியாகவுள்ளன.
இதனிடையே குஜராத்தியில் சாந்த்லோ படம் ஜியோ சினிமாவிலும் ஸ்பானிஷ் மொழியில் தி ஆல்மோஸ்ட் லெஜண்ட்ஸ் படம் நெட்பிளிக்சிலும் வெளியாகவுள்ளன. ஹாலிவுட்டில் தி டீப்பஸ்ட் பிரீத் படம் நெட்பிளிக்சிலும் தே க்ளோன்ட் டைரோன் படம் நெட்பிளிக்ஸ் டாக்கிலும் ஸ்வீட் மேக்னோலியாஸ் நெட்பிளிக்ஸ் சீரிசிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படங்களிள் அனைத்தும் மிகுந்த கவனம் பெற்றுள்ள நிலையில், ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழில் பாயும் ஒளி நீ எனக்கு மற்றும் அஷ்வின்ஸ் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் நாளைய தினம் வெளியாகவுள்ளன. பாரதியாரின் வரிகளில் டைட்டிலை கொண்டுள்ள பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இதேபோல வசந்த் ரவி நடிப்பில் வெளியான அஷ்வின்ஸ் படமும் மிகந்த கவனத்தை பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











