ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு.. புதிய ரெக்கார்ட் பிரேக்!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படம் திட்டம் இரண்டு.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் இப்பொழுது ரசிகர்களின் விமர்சனம் மழையில் நனைந்து மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

நொடிக்கு நொடி திரில்லர் காட்சிகளுடன் வெளியான திட்டம் இரண்டு இப்பொழுது அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ரெக்கார்ட் பிரேக்கிங் செய்துள்ளதை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமிதத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடின உழைப்பு

கடின உழைப்பு

தமிழில் நீதானே அவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ் ,அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் .விமர்சன ரீதியாக படம் நல்ல பெயரை பெற்ற நிலையில்,வருமான ரீதியாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு போகவில்லை .படிப்படியாக முன்னேறி காக்கா முட்டை இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .பார்ப்பதற்கு நம்ம ஊரு பெண் போல் உள்ளதால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது .தனது எதார்த்தமான நடிப்பாலும் ,கடினமான உழைப்பாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இப்பொது முன்னணி கதாநாயகியாக வளம் வந்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது .கிட்டத்தட்ட இருவது சிறந்த நடிகைக்கான விருதுகளை வாரி குவித்துள்ளார்.இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்தும் நல்ல கதையம்சம் கொண்ட தாக இருப்பதால் இவரது படத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டு தான் இருக்கின்றனர் .

வெற்றி நாயகியாக

வெற்றி நாயகியாக

நிறத்தின் அடிப்படையில் ஹீரோயின்களை தேர்ந்தெடுக்கும் அவலம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை தாண்டி தனது கடுமையான உழைப்பின் மூலம் இப்பொழுது வெற்றி நாயகியாக தென்னிந்தியாவில் வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சிறு நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவருக்கு காக்கா முட்டை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. எந்த ஒரு இளம் நடிகையும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க தயங்குவார். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கதாபாத்திரத்தை மட்டும் மனதில் கொண்டு காக்கா முட்டையில் நடித்து பாராட்டுக்களை அள்ளிய தோடு பட வாய்ப்புகளையும் அள்ளினார்.

தங்கை கதாபாத்திரம்

தங்கை கதாபாத்திரம்

அதன்பிறகு தொட்டதெல்லாம் பொன் போல நடித்த அனைத்து திரைப்படங்களும் ஹிட்டானது. நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என கூறாமல் தங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் சரி குணசித்திர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறந்த கதைகளில் நடித்து வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

அபாரமான நடிப்பு

அபாரமான நடிப்பு

முன்னணி நடிகைகள் பலர் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேடி தேடி நடித்து வர அந்த வரிசையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ராஜேஷும் க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படத்தில் முதன்மை ரோலில் நடித்திருந்தார். இதில் கணவராக நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்வார். படம் முழுவதும் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலம் கைதட்டல்களை பெற்ற ஐஸ்வர்யாவுக்கு இப்பொழுது தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

திட்டம் இரண்டு

திட்டம் இரண்டு

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் திட்டம் இரண்டு என்ற த்ரில்லர் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் முதன்மை வேடத்தில் நடித்து பட்டையைக் கிளப்பி உள்ளார் . திரையரங்குகளில் வெளியாக இருந்த திட்டம் இரண்டு கொரோனா காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது.

ரெக்கார்ட் பிரேக்கிங்

ரெக்கார்ட் பிரேக்கிங்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை வில்லேஜ், சிட்டி என பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் திட்டம் இரண்டில் போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அவிழ்க்க முடியாத முடிச்சுக்களால் இருக்கையின் நுனியில் உட்கார வைத்து க்ளைமேக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட்க்காகவே படம் வேற லெவல் வெற்றி பெற்றுள்ளது . இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களை கொண்ட படங்களில் ஒன்றாக திட்டம் இரண்டு ரெக்கார்ட் பிரேக்கிங் செய்துள்ளது . இந்த செய்தியை சமூக வலைதளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெருமையுடன் பதிவிட்டு பாராட்டுகளை பெற்று வருகிறார். அடுத்து பூமிகா என்ற திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் ஓடிடியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இவரது நடிப்பில் ஏற்கனவே க/பெ ரணசிங்கம் படம் OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .அதே போல் இந்த படமும் ரசிகர்களால் பெரும் அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது .

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

அடுத்து பூமிகா என்ற திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் ஓடிடியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டிரைவர் ஜமுனா ,மோகன்தாஸ் ,துருவ நட்சத்திரம் போன்ற பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் .இது மட்டும் அல்லாமல் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற படத்தின் தமிழ் ,மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடித்து கொண்டு இருக்கிறார் .ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் என்றால் ஐஸ்வர்யா பின்னி பெடலெடுப்பார் என்று அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான் அதனால் ,இந்த படம் மிக பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X