தியேட்டரில் மொரட்டு அடி.. ஓடிடியில் பயங்கர ரெஸ்பான்ஸ்.. தக் லைஃப் நிலைமை என்ன தெரியுமா?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தக் லைஃப். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. படத்தின் மேக்கிங், கதை என எதுவுமே இதில் ஒழுங்காக இல்லை என்று ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். விமர்சன ரீதியாக பலத்த அடியை சந்தித்த அந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த படம் தக் லைஃப். நீண்ட வருடங்கள் கழித்து கமலும் மணிரத்னமும் இணைந்ததாலும்; கமலுடன் சிம்பு முதன்முறையாக சேர்ந்து நடித்ததாலும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆர்வத்தோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு படத்தில் இடம்பெற்ற ஒரு விஷயம்கூட கனெக்ட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்னை?: இந்தப் படத்தின் கதையை எழுதியது கமல்ஹாசன். படத்தின் கதை ஒரு பெண்ணுக்காக தந்தையும், வளர்ப்பு மகனும் அடித்துக்கொள்வது போன்று இருந்தது. முக்கியமாக கேங்ஸ்டர்களுக்குள் நடக்கும் பிரச்னைதான் இந்தப் படம் என்றாலும்; அதை விட்டுவிட்டு படம் எங்கெங்கோ ட்ராவல் ஆனது. இதனால் காண்டான ரசிகர்கள் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். வசூல் மற்றும் விமர்சானம் என இரண்டு ஏரியாக்களிலும் படம் மொரட்டு அடி வாங்கியது.

Thug Life Movie released on Netflix OTT has received 3 3 million views in its second week
Photo Credit:

மணிரத்னம் விளக்கம்?: சூழல் இப்படி இருக்க தக் லைஃப் படம் குறித்து மணிரத்னம், 'நானும் கமல்ஹாசனும் இணைந்து வேறு மாதிரியான படம் கொடுக்க நினைத்தோம். இன்னொரு நாயகன் போல் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் ரசிகர்கள் எங்களிடமிருந்து முற்றிலும் வேறுபடியான படத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்' என கூறியதாகவும்; அதற்கு ராஜ்கமல் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தன.

ஓடிடியில் ரிலீஸ்: இதற்கிடையே படத்தில் சிம்புவின் ரோலும் சொல்லிக்கொள்ளுபடி இல்லாததன் காரணமாக எஸ்டிஆர் ரசிகர்களும் தக் லைஃப் படத்தை பார்த்து ஒட்டுமொத்தமாக காண்டாகிவிட்டார்கள். இப்படமானது திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸை பெறாததால் ஓடிடியிலாவது கவருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சில நாட்களுக்கு முன்புதான் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது.

ஓடிடியில் பாசிட்டிவ்: இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸில் தக் லைஃப் திரைப்படம் குறிப்பிடத்தகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது. அதாவது இந்தப் படம் ஓடிடியில் வெளியான முதல் வாரத்தில் 24 லட்சம் பார்வைகளை பெற்றது; தற்போது இரண்டாவது வாரத்தில் 33 லட்சம் பார்வைகளை பெற்று இந்திய அளவில் அதிக பார்வைகளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பெற்ற படம் என்ற பெயரை வாங்கியிருக்கிறது. தியேட்டரில் அடி வாங்கிய தக் லைஃப் ஓடிடியிலாவது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருப்பது படக்குழுவுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்திருக்கும் என்று கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X