இந்த வார ஓடிடி ரிலீஸ்.. அஜித்தின் துணிவு.. ஹன்சிகாவின் திருமண வீடியோ.. இன்னும் என்னவெல்லாம் இருக்கு?
சென்னை: தியேட்டரில் கடந்த வாரம் பல படங்கள் வெளியானாலும் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. இந்நிலையில், இந்த வாரம் ஓடிடியில் என்ன என்ன படங்கள், வெப்சீரிஸ் வெளியாக உள்ளன என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காதலர் தின கொண்டாட்டமாக வெளியாகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்தமாக ஓடிடியில் வெளியாக உள்ள முக்கியமானவை குறித்து இங்கே பார்ப்போம்..

நான் மிருகமாய் மாற
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான நான் மிருகமாய் மாற திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ஹரிபிரியா ஆன்ந்தி, விக்ராந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

நெட்பிளிக்ஸில் துணிவு
கடந்த சில ஆண்டுகளாக நெட்பிளிக்ஸில் மொக்கை படங்களே ரிலீஸ் ஆகி வந்த நிலையில், அதன் சப்ஸ்கிரைபர்கள் அநியாயத்திற்கு டாட்டா காட்டி விட்டு கிளம்பி விட்டனர். இந்நிலையில், இந்த ஆண்டு எத்தனை கோடி செலவு செய்தாலும் பரவாயில்லை, சப்ஸ்கிரைபர்கள் கைப்பற்றியே ஆகவேண்டும் என்கிற முயற்சியில் ஆரம்பத்திலேயே அஜித்தின் துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம் நாளை ஜனவரி 8ம் தேதி வெளியாகிறது.

விஜய்சேதுபதி வெப்சீரிஸ்
சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் மற்றும் ராஷி கன்னா நடிப்பில் உருவாகி உள்ள அதிரடியான ஆக்ஷன் வெப்சீரிஸ் வரும் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஃபார்ஸி டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா திருமண வீடியோ
நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவித்த நிலையில், சில பல சிக்கல்கள் காரணமாக அந்த திருமண வீடியோ இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், டிசம்பர் மாதம் திருமணமான நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ வரும் பிப்ரவரி 10ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. புதிய டிரெய்லரும் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

யூ சீசன் 4
நெட்பிளிக்ஸ் ஓடிடி ரசிகர்களின் அதிக விருப்பமான எரோடிகா வெப்சிரீஸான யூ சீசன் 4 வரும் பிப்ரவரி 9ம் தேதி ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய அடல்ட் கன்டென்ட்கள் நிறைந்த வெப்சீரிஸ் இது. மேலும், நெட்பிளிக்ஸ் ஒவ்வொரு மாதமும் பல வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களை அடுத்தடுத்து களமிறக்க லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











