OTT - சக்கைப்போடு போட்ட டில்லு ஸ்கொயர்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா.. அனுபமா ஃபேன்ஸ் ரெடியா?

சென்னை: தெலுங்கு சினிமாவில் இந்த ஆண்டு மூன்று படங்கள் இதுவரை 100 கோடி வசூலை கடந்துள்ளன. மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம், தேஜா சஜ்ஜா நடித்த ஹனுமான் மற்றும் சமீபத்தில் சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான டில்லு ஸ்கொயர் உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளன.

இந்த ஆண்டு இதுவரை மலையாளம் முன்னணியில் இருக்கும் நிலையில் டோலிவுட் மற்றும் பாலிவுட் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. தமிழ் சினிமா மற்றும் கன்னட சினிமா நிலைதான் ரொம்பவே கவலைக்கிடமாக உள்ளது.

Tillu Square will arrive soon on OTT and its release date locked

தமிழ் சினிமா எப்படி இருந்தாலும் இரண்டாம் பாதியில் தப்பித்து விடும் என்று தெரிகிறது. ஆனால், சாண்டல்வுட்டுக்கு இந்த ஆண்டு சங்குதான் எனக் கூறுகின்றனர்

சொதப்பிய சைரன்: அனுபமா பரமேஸ்வரனுக்கு தமிழில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்த சைரன் 108 திரைப்படம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறவில்லை. ஆனால், அதற்கு பதிலாக தெலுங்கில் அவர் ஹீரோயினாக நடித்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

125 கோடி வசூல்: இயக்குநர் மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகட மற்றும் அனுபவமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான டில்லு ஸ்கொயர் இதுவரை உலக அளவில் 125 கோடி வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் இளம் நடிகர் சித்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனுபமா பரமேஸ்வரனையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

ஓடிடி ரிலீஸ் எப்போ?: சித்து மற்றும் அனுபவமா பரமேஸ்வரன் இருவரும் படு நெருக்கமாக லாங் லிப் கிஸ் எல்லாம் கொடுத்து நடித்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய பெற்றிருந்தது. காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த திரைப்படமாக வெளியான இந்த படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tillu Square will arrive soon on OTT and its release date locked

அனுபமா ரசிகர்கள் ஹேப்பி: ஏப்ரல் 19-ஆம் தேதி இந்த வாரம் அனுபமா பரமேஸ்வரன் நடித்த சைரன் 108 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், அடுத்த வாரம் ஏப்ரல் 26-ஆம் தேதி டில்லு ஸ்கொயர் திரைப்படம் நெடபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது.

வரிசையா பல படங்கள்: சைரன் படம் ஓடிடியில் வெளியான நிலையில், அடுத்து மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் மே 3ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அடுத்த வாரம் டில்லு ஸ்கொயர் வெளியாக உள்ள நிலையில், லால் சலாம், ஆடு ஜீவிதம், டியர், ரோமியோ என வரிசையாக பல படங்கள் விரைவில் ஓடிடியில் வெளியாக காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X