OTT: ஆத்தி.. இந்த வாரம் ஓடிடி வாரமா?.. டில்லு ஸ்கொயர் முதல் டியர் வரை.. வரிசை கட்டிய படங்கள்!

சென்னை: தியேட்டரில் இன்று விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், ஓடிடியில் இந்த வாரம் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் வரிசை கட்டி நிற்கின்றன. என்னென்ன படங்கள் எந்தெந்த ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது என்பதை எங்கே பார்க்கலாம் வாங்க..

கொரோனா காலத்தில் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், ஓடிடி நிறுவனங்கள் எதிர்காலமே நாம் தான் என்கிற திட்டத்துடன் உலகம் முழுவதும் அதிகமான மக்களை கவர்ந்து விட்டன. வீட்டிலேயே புதிய படங்களை குடும்பத்துடன் ஒரே ஒரு மாத சந்தா அல்லது வருட சந்தா செலுத்தி பார்க்க முடிகிறதே, இது நல்லா இருக்கு என நினைத்த பல குடும்பங்கள் தியேட்டருக்கு அதிகம் செல்வதை நிறுத்திவிட்டு புதிய படங்களை 4 வார இடைவெளியில் ஓடிடியில் பார்க்க ஆரம்பித்து விட்டன.

Today and This week OTT release update Tillu Square to Dear will ready for streaming

படத் தயாரிப்பாளர்களும் சமீப காலமாக தியேட்டர் வசூலை நம்பாமல் ஓடிடியில் போட்ட காசை எடுக்க முடிகிறதா என்பதைப் பார்த்து தான் திரையரங்கில் படத்தை வெளியிடுவதாக கூறுகின்றனர்.

ஃபேமிலி ஸ்டார்: விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் வெளியான ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது. தியேட்டரில் அந்த படத்துக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்காத நிலையில் ஓடிடி ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் லிப் லாக் காட்சியே ஓடிடி ரசிகர்களை கவர்ந்து விடும் என்கின்றனர்.

Today and This week OTT release update Tillu Square to Dear will ready for streaming

டில்லு ஸ்கொயர்: சித்து மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான டில்லி ஸ்கொயர் திரைப்படம் தெலுங்கில் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது. தியேட்டரில் மட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுக்கு ஓடிடியிலும் வில்லனாக மாறியுள்ளது இந்த டில்லு ஸ்கொயர்.

டியர் ஓடிடி எப்போ?: வார வாரம் தியேட்டரில் படங்களை வெளியிட்டு வந்த ஜிவி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான டியர் திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடும் பழக்கம் கொண்டவராக நடித்துள்ளார். ஏற்கனவே மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் இதே போன்ற கதையுடன் வெளியான நிலையில், இந்த படம் தியேட்டரில் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Today and This week OTT release update Tillu Square to Dear will ready for streaming

இன்னும் லிஸ்ட் இருக்கு: அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான லாப்டா லேடீஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. அதே போல அமீர்கான் கலந்து கொண்ட தி கிரேட் இந்தியன் கபில் ஷோ எனும் பிரபல வெப் ஷோவும் இந்த வாரம் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. மேலும், ஜியோ சினிமாவில் ராணீதி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 'தி வெயில்' எனும் ஹாலிவுட் படமும் இந்த வாரம் வெளியாகிறது. ஓடிடி ரசிகர்கள் உட்கார்ந்த இடத்திலேயே ஏகப்பட்ட படங்களை இந்த வாரம் ஹோம் தியேட்டரை போட்டுக் கொண்டு கண்டு ரசிக்கலாம். தியேட்டர் அனுபவத்தை பெற விரும்புபவர்கள் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் திரைப்படமான ரத்னம் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X