OTT Today Release: ஜீவாவின் TTT தொடங்கி.. நயன்தாராவின் மன ஷங்கர வர பிரசாத் காரு வரை.. விவரம் இதோ!
சென்னை: என்னதான் தியேட்டரில் ஒரு டார்க் அட்மாஸ்பியரில் படம் பார்த்தாலும் ஒரு படத்தை பார்க்க பார்க்கவே காட்சிக்கு காட்சி டீ கோட் செய்து பார்க்க ஏதுவான இடம் ஓடிடி தளங்கள் தான். படத்தை பிரேமுக்கு பிரேம் உற்று கவனித்து படம் பார்க்க முடியும். இதற்காகவே பெரும்பாலான சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு செலக்டிவான படங்களுக்குச் சென்றுவிட்டு, மீதி எல்லாம் ஓடிடி தளங்களில் பார்த்து விடுகிறார்கள். அப்படி இருக்கையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தலைவர் தம்பி தலைமையில். இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க மொத்த படமும் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது. படத்தில் இளவரசு, தம்பி ராமையா என தரமான குணச்சித்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமான பலரும் நடித்திருந்தனர். மிகவும் எளிமையான கதை, குடும்பங்களை உள்ளடக்கிய திரைக்கதை, முழுக்க முழுக்க நகைச்சுவை என மொத்த படமும் ஜனரஞ்சகமான படத்திற்கு ஏற்ற அத்தனை அம்சத்தையும் கொண்டிருந்தது.

தலைவர் தம்பி தலைமையில்: படம் வெளியான காலகட்டத்திலேயே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தில் இடம் பெற்ற ஒரு வசனம் அரசியல் தளத்தில் விவாதத்தை எழுப்பினாலும் அது படத்தின் வணிக வெற்றியை பாதிக்கவில்லை. இந்நிலையில் படம் இன்று முதல் அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கி உள்ளது. இது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக மாறி உள்ளது.

மன ஷங்கர வர பிரசாத் காரு: அதேபோல், நடிகர் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து நேரடியாக தெலுங்கில் வெளியான படம் மன ஷங்கர வர பிரசாத் காரு படம் இன்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்த படத்தை பகவந்த் கேசரி படத்தை இயக்கிய அனில் ரவிபுடி இயக்கினார். படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியை குவித்தது. குறிப்பாக படம் முதல் 10 நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் எல்லாம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நயன்தாராவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இந்த படம் மாறியது.


Click it and Unblock the Notifications











