OTT: சிங்கப்பூர் சலூன் முதல் மலைக்கோட்டை வாலிபன் வரை!.. இன்று ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?
சென்னை: ஆர்ஜே பாலாஜி நடிப்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 25ம் தேதி வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதே போல மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஃபேண்டஸி திரைப்படமும் ஓடிடி ரசிகர்களின் பார்வைக்கு ரிலீஸ் ஆகியிருக்கிறது.
தியேட்டரில் இன்று 8 படங்கள் வெளியாகி உள்ளன. சதீஷ் நடித்த வித்தைக்காரன், டான்ஸிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் நடித்த பர்த்மார்க், மயில்சாமி கடைசியாக நடித்த கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட பல சிறு படங்கள் இன்று வெளியாகி உள்ளன.

தியேட்டருக்கு சென்று படங்களை பார்க்க தவிர்த்து வரும் ரசிகர்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே ஓடிடியில் புதிய படங்களை பார்த்து வருகின்றனர்.
அதிக செலவு: தியேட்டருக்கு சென்று ஒரு குடும்பம் ஒரு படத்தை பார்க்கும் செலவில் ஒரு வருடத்திற்கு ஓடிடியில் ஓராயிரம் படங்களை ரசிகர்கள் பார்க்க முடிவதால் தியேட்டரை ரசிகர்கள் பலரும் புறக்கணித்து குடும்பத்துடன் புதிய படங்களை அதுவும் 4 வாரங்கள் பொறுத்துக் கொண்டால் போதும் லீகலாக ஓடிடியில் வரும் படங்களை பார்த்து விடலாம் என பலரது மனமும் மாறிவிட்டன. அதை டார்கெட் செய்தே ஓடிடி நிறுவனங்களும் புதிய படங்களை வாங்கி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.
சிங்கப்பூர் சலூன் ரிலீஸ்: கடந்த ஜனவரி 25ம் தேதி ஆர்ஜே பாலாஜி, மீனாக்ஷி சவுத்ரி, சத்யராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. சிறு வயதில் இருந்து முடிதிருத்த வல்லுநராக மாற வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ள ஆர்ஜே பாலாஜி சென்னையிலேயே பெரிய சலூனை உருவாக்குகிறார். அதன் மூலம் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் அதை எப்படி சமாளிக்கிறார் என்கிற கதையை காமெடியும் கருத்தும் கலந்து சொல்லியிருக்கின்றனர்.

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்: லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான மலைக்கோட்டை வாலிபன் படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தியேட்டரில் வெளியான இந்த ஃபேண்டஸி திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில், ஓடிடியில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போச்சர்: ஆலியா பட் தயாரித்துள்ள போச்சர் (Poacher) வெப்சீரிஸ் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன் சேப்டர் ஒன் படங்களில் நடித்த மலையாள நடிகை நிமிஷா சஜயன் இந்த வெப்சீரிஸில் நடித்துள்ளார். யானைகளை வேட்டையாடும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த வெப்சீரிஸ் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகி இருக்கிறது.

இத்தனை படங்கள் மற்றும் வெப்சீரிஸ்: மேலும், இன்று ஓடிடியில் நந்திவர்மன் படம் டென்கொட்டாவிலும், ப்ளூ ஸ்டார் திரைப்படம் இந்தியா தவிர மற்ற வெளிநாடுகளிலும் வெளியாகி இருக்கிறது. யோகி பாபு நடித்த தூக்குதுரை சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. நெட்பிளிக்ஸில் அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர், ஆண்டனி டெலுங்கு டப்பிங் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











