OTT Movies: மலையாளப் படங்களின் தீவிர ரசிகரா! 2024இல் ரிலீஸ் ஆகி ஓடிடியில் கெத்து காட்டும் 5 படங்கள்
சென்னை: நமது ஃபிலிமி பீட் தளத்தில் வார வாரம் ஓ.டி.டி தளங்களில் உள்ள தரமான உள்ளூர் படங்கள் தொடங்கி உலக படங்கள் வரை, அவற்றின் கதை குறித்தும் அவை எந்த ஓ.டி.டி தளத்தில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக பார்த்து வருகின்றோம்.
அதில் இது ஆறாவது வாரம். அந்த வகையில் இந்த கடந்த வாரம் கொரியன் படங்கள் குறித்து பார்த்தோம். இந்த வாரம், 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் ரிலீஸ் ஆன மலையாளப் படங்களில் ஓடிடி தளங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற டாப் 5 படங்கள் குறித்து காணலாம்.

1. மஞ்சுமெல் பாய்ஸ்: 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு மலையாளத்திலும் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் வெளியான குணா படத்தில் இடம் பெற்ற பாடலான கண்மணி அன்போடு காதலன் பாடல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்றாக கனெக்ட் ஆனதால் படம் தமிழ்நாட்டிலும் வசூலை வாரிக் குவித்தது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது.

2. பிரேமலு: கல்லூரிப் படிப்பை முடித்த கதாநாயகன் மற்றும் கதாநாயகி ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்ட பின்னர் நடப்பதை மிகவும் நெருக்கமாக காமெடியாக அதேநேரத்தில் காதலில் ஊறித் திளைக்க வைக்கும் அளவிற்கு படத்தினை மிகவும் சிறப்பாக எடுத்ததால்தான் திரையரங்கிலும் இந்த படம் பெறும் வெற்றியைப் பெற்றது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது.

3. ஆவேஷம்: ஃபகத் ஃபாசில் என்ற ஒற்றை நடிப்பு அரக்கனின் அசாத்திய நடிப்பினால் ஒட்டுமொத்த படத்தினையே முழுக்க முழுக்க தன் தோளில் ஏற்றி வெற்றி பெற வைத்துள்ளார். இந்த படமும் தமிழ் நாட்டில் திரையரங்குகளில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஈர்த்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் திரையரங்கிற்கு வந்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது. இந்த படம்தான் ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான படங்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை எட்டிய முதல் படம் ஆகும்.

4. ஆடு ஜீவிதம்: தேசிய விருது வாங்கிய ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான படம் தான் ஆடு ஜீவிதம். ஆடு ஜீவிதம் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் மாதம் வெளியானது. படம் திரையரங்கில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 160 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. இந்த படம் தற்போது நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது.

5. குருவாயூரில் அம்பள நடையில்: முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்திலும் பிரித்விராஜ் சுகுமாறன் நடித்துள்ளார். இந்த படத்திலும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தினைப் போல் தமிழ் பாடலான அழகிய லைலா பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடல் இடம் பெற்றுள்ள இடத்தில் எல்லாம் சிரிப்பலையும் கைத்தட்டலும் ஒலித்துக்கொண்டே இருந்தது. இந்த படமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











