OTT: அடேங்கப்பா.. ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்?.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!

சென்னை: பாலிவுட் முதல் டோலிவுட் நடிகைகள் வரை சினிமா படங்களை தாண்டி ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்து விட்டனர். எந்தளவுக்கு உச்சகட்டமாக கவர்ச்சி காட்டி நடிக்க முடியுமோ அந்தளவுக்கு நடித்து வருகின்றனர். மேலாடையை கழட்டி நடிக்க வேண்டும் என்றாலும், உதட்டு முத்தக் காட்சிகளிலும் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் நடித்து வருகின்றனர்.

இதில், அதிகமாக சம்பாதிக்கும் டாப் 5 நடிகைகள் குறித்த பட்டியலையும், அதில், அனைவரையும் ஓவர்டேக் செய்து விட்டு அதிக சம்பளம் வாங்கும் அந்த பிரபல நடிகை குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..

Top 5 highest paid OTT actress in India list is here

5. பிரியாமணி: அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதில், ஹீரோ மனோஜ் பாஜ்பாயின் மனைவியாக பிரியாமணி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஓடிடி பக்கம் பிரியாமணி வந்த நிலையில், அங்கேயும் தனது நடிப்பால் சிக்சர் அடித்திருப்பார். அந்த வெப்சீரிஸ்காக அதிகபட்சம் பிரியாமணி 10 முதல் 20 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார் என்கின்றனர்.

Top 5 highest paid OTT actress in India list is here

4. ராஷி கன்னா: விஜய்சேதுபதி, ஷாகித் கபூர் நடித்து அதே ராஜ் மற்றும் டிகே இயக்கிய ஃபர்ஸி வெப்சீரிஸில் டாப்லெஸ் ஆக நடித்த ராஷி கன்னா ஓடிடியில் நடித்ததற்காக 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார். தொடர்ந்து பல வெப்சீரிஸ்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

Top 5 highest paid OTT actress in India list is here

3. சுஷ்மிதா சென்: ஆர்யா மற்றும் ஆர்யா 2 என பல வருடங்களுக்கு பிறகு வெப்சீரிஸில் களமிறங்கிய மிஸ் யூனிவர்ஸ் நம்ம ஷக்கலக்கா பேபி சுஷ்மிதா சென் 2 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலிவுட்டில் இருந்து ஒதுங்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த அவர் லலித் மோடியை காதலிப்பதாகவும் தகவல்கள் பரவின.

Top 5 highest paid OTT actress in India list is here

2. ராதிகா ஆப்தே: ஓடிடி என்றாலே அனைவருக்கும் உடனடியாக ராதிகா ஆப்தே தான் நினைவுக்கு வருவார். சினிமாவில் அதிகமாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றதும் ஓடிடியில் தாராளம் காட்டி நடிக்க ஆரம்பித்து விட்டார். சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் என நடித்து மெர்சல் காட்டிய ராதிகா ஆப்தே ஒரு வெப்சீரிஸுக்க 4 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருவதாக கூறுகின்றனர்.

Top 5 highest paid OTT actress in India list is here

முதலிடத்தில் சமந்தா: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்தவர் நம்ம சமந்தா தான். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் சீசன் 2வில் ராஜி எனும் கதாபாத்திரத்தில் ஈழப் போராளியாக நடித்திருந்தார். படு போல்டாக அந்த வெப்சீரிஸில் சமந்தா நடித்த நிலையில், அவருக்கு 4 கோடி ரூபாய் எடுத்த எடுப்பிலேயே வழங்கப்பட்டது. அடுத்ததாக மீண்டும் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் சிட்டாடல் வெப்சீரிஸில் நடிக்க சமந்தாவுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் பல படங்களுக்கே அவர் இவ்வளவு பெரிய சம்பளத்தை வாங்கவில்லை என்றும் கூறுகின்றனர். இனிமேல், சமந்தா நடிக்கும் படங்களுக்கும் வெப்சீரிஸ்களுக்கும் 10 கோடிக்கு மேல் தான் சம்பளம் வாங்குவார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X