நெட் ஃபிளிக்ஸில் கெத்து காட்டிய இந்திய படங்கள்; நயன்தாராவை ஓரம் கட்டிய ஜோதிகா படம்!

மும்பை: சமீபகாலமாக ஓடிடி.,யில்படம் பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு தியேட்டரின் டிக்கெட்டின் விலை அதிகமாய் கொண்டே போகிறது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் ஓடிடி தளங்களில் நாம் நினைக்கும் போது நினைத்த நேரத்தில் படத்தை பார்க்க முடியும் என்ற சௌகரியம் இருப்பதால் மக்கள் ஓடிடி தளங்களை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கின்றனர். படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் படத்தை தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் ஓடிடி மூலம் படத்தை பார்த்து விடுகின்றனர்.

ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் தியேட்டரில் பெரிதாக வசூல் குவித்து இருக்காது. அப்படியான படங்கள் கூட ஓடிடியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஒரு சில படங்கள் தியேட்டரிலும் ஓடிடியிலும் சக்கை போடு போட்டு வசூலை குவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் பல மொழிகளில் ஒரு படத்தினை நம்மால் பார்க்க முடியும்.

OTT Anil Kapoor Crew Animal Jyothika Madhavan

டாப் 5: இப்படி இந்தியாவில் வெளியான படங்களில் ஓடிடியில் வெளியான மூன்று வாரங்களில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் எவை எவை என்பதை நடிகர் அனில் கபூர் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாகப் பதிவிட்டுள்ளார்.

OTT Anil Kapoor Crew Animal Jyothika Madhavan

கரீனா கபூர்: இதில் முதல் இடத்தில் க்ரூ உள்ளது. இப்படம் திருட்டுத் தொழில் செய்யும் மூன்று பெண்களை மையப்படுத்திய கதை. நகைச்சுகை கலந்த திரைக்கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தியேட்டரிலும் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் தபு, கரீனா கபூர் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை உலகம் முழுவதும் 16.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் கரீனா கபூர் நடிப்பில் வெளியான ஜானே ஜான் படம் உள்ளது. இந்த படத்தின் கதை பாராட்டைப் பெற்ற அளவிற்கு கரீனா கபூரின் நடிப்பும் பாராட்டைப் பெற்றிருந்தது. இந்த படத்தை நெட் ஃபிளிக்ஸில் மொத்தம் 16.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

OTT Anil Kapoor Crew Animal Jyothika Madhavan

அனிமல் படம்: இதற்கு அடுத்த இடத்தில் உள்ள படம் ஹிர்திக் ரோஷன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஃபைட்டர் படம்தான். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தினை நெட் ஃபிளிக்ஸில் மொத்தம் 14 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் உள்ள படம் அதாவது நான்காவது இடத்தில் உள்ள படம் அனிமல். ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிடோர் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தியேட்டரிலேயே வசூல் வேட்டையை நடத்தியது. இந்த படத்தினை நெட் ஃபிளிக்ஸில் மொத்தம் 13.6 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இந்த இரண்டு படங்களிலும் அனில் கபூர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

OTT Anil Kapoor Crew Animal Jyothika Madhavan

ஐந்தாவது இடத்தில், சைத்தான் உள்ளது. மாதவன், ஜோதிகா மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ப்ளாக் மேஜிக் படம்தான் சைத்தான். இந்த படத்திற்கு தியேட்டரில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தினை மொத்தம் 13 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஆயிரம் கோடி வசூல் செய்த ஷாரூக்கான் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான், டங்கி படங்கள் எல்லாம் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளது.

OTT Anil Kapoor Crew Animal Jyothika Madhavan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X