Top 5 Spy Thrillers: மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 5 த்ரில்லர் படங்கள்!
சென்னை: பல கோடிகள் செலவு செய்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் முதல், குறைவான பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வரை பல படைப்புகள் ஓடிடி தளங்களில் வெளிவருகின்றன.
இதனால் அமேசான்,நெட்பிளிக்ஸ்,சன் நெக்ட், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்,ஹங்காமா,ஆஹா என பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வெளியிட்டு வருகின்றன.

இந்த வகையில் தமிழ், மலையாளம், இந்தி என தென்னிந்திய மொழிகளில் வெளியான சில த்ரில்லர் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பதான்
ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் 'ரா' உளவாளியாக பதான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்காக, இந்தியா மீதான தாக்குதலுக்குத் திட்டமிடுகிறார் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி அதை பதான் முறியடித்தார் என்பதற்கான விடை சொல்கிறது திரைக்கதை. ஆயிரம் கோடி வசூலை அள்ளிய இத்திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
மிஷன் மஜ்னு
ராஷ்மிகா மந்தனா , பர்மீத் சேத்தி , ஷரிப் ஹஷ்மி , குமுத் மிஸ்ரா, மற்றும் ரஜித் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் மிஷன் மஜ்னு. ஸ்பை திரில்லர் திரைப்படத்தை சாந்தனு பாக்சி இயக்கினார். சித்தார்த் மல்ஹோத்ரா இத்திரைப்படம் இந்திய-பாகிஸ்தான் போருக்கு முன்னும் பின்னும் நடைபெறும் வன்முறை குறித்து விரிவாக பேசுகிறது.சன்பென்ஸ் திரில்லர் பட பிரியர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.இப்படத்தை தற்போது நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்
குஃபியா
தபு, அலி ஃபசல், வாமிகா கபி, அஸ்மேரி ஹக் பதோன், ஆஷிஷ் வித்யார்த்தி, நவ்னிந்த்ரா பெஹல் ஆகியோரின் அதிரடியான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 'குஃபியா'.அமர் பூஷனின் நாவலான எஸ்கேப் டு நோவேர் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை பரத்வாஜ் எழுதி இயக்கி உள்ளார். மூன்று ஏமாற்றும் பெண்கள் மற்றும் ஒரு தந்திரமான மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அம்சங்கள் திரில்லிங்காக சொல்லப்பட்டுள்ளது. அக்டோபர் 5ந் தேதி வெளியான இப்படத்தை நெட்ஃபிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
அஞ்சாம் பத்திரா:
கடந்த 2020ம் ஆண்டு வெளியான மலையாள மொழியின் கிரைம் திரில்லர் படம் தான் அஞ்சாம் பத்திரா. இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஷரஃப் யு தீன், ஸ்ரீநாத் பாசி, ஜினு ஜோசப் மற்றும் உன்னிமய பிரசாத் ஆகியோர் நடித்திருந்தனர். காவலர்கள் பலரையும் இரக்கமின்றி தொடர்ச்சியாக கொலை செய்யும் ஒரு முகம் தெரியாத சைக்கோ கில்லரை கண்டுபிடிக்க குற்றவியல் நிபுணர்கள், போலீசார் முயற்சி செய்யும் கதை தான் இது.
The night manager 2023
டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ஒரு திரில்லர் வெப் தொடர் ஆகும். இதில்,சோபிதா துலிபாலா, அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு எபிசோடிலும் சஸ்பென்சுக்கு குறைவே இருக்காது. இந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











