Tribhuvan Mishra CA Topper Review: ஆம்பள ஐட்டமாக மாறும் சிஏ டாப்பர்.. ஓடிடி விமர்சனம் இதோ!

சென்னை: புனீத் கிருஷ்ணா உருவாக்கியுள்ள திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கைப் போடு போட்டு வருகிறது. மனவ் கவுல், திலோத்தமா ஷோமே இந்த வெப்சீரிஸில் லீடு ரோலில் நடித்து மிரட்டியுள்ளனர்.

பெண்கள் விலைமாதுகளாக செல்லும் கதையெல்லாம் காலம் காலமாக பார்த்து விட்ட ரசிகர்களுக்கு உலகம் முழுவதும் தற்போது ஆண்கள் அந்த தொழிலை செய்யும் படங்களை இயக்குநர்கள் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

Review OTT

தமிழில் வெளியான ஹாட்ஸ்பாட் படத்தில் ஜனனி ஐயர் நடித்த கதையில் ஹீரோவாக நடித்த சுபாஷ் தனது பணத் தேவைக்காக ஆம்பள ஐட்டமாக மாறியிருப்பார். அதே கதை தான் இங்கேயும் நடக்கிறது. திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் வெப்சீரிஸின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர் கதை: நொய்டாவில் நேர்மையான ஊழல் பக்கமே தலை வைத்து படுக்காத அதிகாரியாக திரிபுவன் மிஸ்ரா உள்ளார். நேர்மையான அதிகாரி என்றாலே வறுமையான வாழ்க்கை தான் என்கிற எழுதப்படாத விதியை இந்த கதையிலும் வைத்துள்ளனர். மேலும், இவர் சேர்த்து வைத்துள்ள பணம் இருக்கும் வங்கி மோசடியில் ஈடுபட்டு திவாலாகி விட குழந்தைகளுக்கான ஃபீஸ், பெற்றோர்களின் பூர்விக வீட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, அலுவலகத்தில் ஏற்படும் சிக்கல் என பணத்தேவை பெரும் சவாலாக முன்னிற்க பணம் படைத்த பெண்களின் சுகவாசியாக மாறுகிறார் திரிபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர். அதன் பின்னர், அவருக்கு ஏற்படும் பிரச்சனை தான் இந்த வெப்சீரிஸின் கதை.

வெப்சீரிஸ் எப்படி இருக்கு?: தட்டினால் தான் ஆன் ஆகும் ஓட்டை மைக்ரோ ஓவனை வைத்துக் கொண்டு கேக் செய்துக் கொடுத்து தன்னால் இயன்றதை சம்பாதிக்கும் மனைவி, பணக்கார பெண்கள் வாங்கும் உடைகளை தன்னால் வாங்க முடியவில்லையே என பெருமூச்சு விடும் நிலை. உயர் அதிகாரி சொன்னாலும், ஊழல் செய்ய மாட்டேன் என நேர்மையான அதிகாரியாக வாழ்க்கையை நடத்தும் திரிபுவன் மிஸ்ராவை எல்லாரும் லூசர் என அழைக்கின்றனர்.

ஸ்வீட் கடை நடத்திக் கொண்டே அண்டர் கிரவுண்ட் டானாக செயல்படும் டீக்காராம் ஜெயினாக வரும் சுப்ரஜோதி பரத்தின் வில்லத்தனம் தியேட்டரில் கள்ளக் காதலர்களை பிடிப்பதில் தொடங்கி பல கேங்ஸ்டர் வேலைகளை காட்டுகிறது. அவருடைய மனைவியாக இருக்கும் திலோத்தமா ஷோமேவுக்கு இன்னமும் தான் இளைமையாக இருக்கிறோம் என்றும் உல்லாச வாழ்க்கையில் தனக்கான சுகம் தேவை என்றும் எதிர்பார்க்கிறார். அவரிடம் தான் வந்து சிக்குகிறார் நம்ம சிஏ டாப்பர். அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை.

Review OTT

நல்லா இருக்கா? இல்லையா?: கதையில் ஒரு கிளுகிளுப்பு இருப்பதால் நல்லா இல்லை என்றாலும் இளைஞர்கள் தனித்தனியாக நெட்பிளிக்ஸில் இந்த வெப்சீரிஸை பார்த்து ஹிட் ஆக்கி விடுவார்கள். பெண்களின் காமத்தை தீர்க்கும் வித்தை தெரிந்த நபராக காட்டப்படும் மிஸ்ரா பல பெண்கள் அழைக்க சென்று பணம் சம்பாதித்து தனது வாழ்க்கையை மாற்றிக் காட்டி தான் லூசர் இல்லை என்பதை குடும்பத்தினருக்கு உணர்த்துகிறார். டீக்காராம் சாதாரண நபர்களையே போட்டுத் தள்ளும் டானாக இருக்கும் நிலையில், அவருடைய வீட்டிலேயே பலான வேலையை பார்த்தால் பஞ்சாயத்து என்ன ஆகும் என்கிற திரைக்கதையில் சுவாரஸ்யம் இருப்பதால் பார்க்கலாம்.

ஆனால், சொல்ல வந்த கதையை சட்டுபுட்டுனு சொல்லாமல், வெப்சீரிஸ் தானே தலையை சுற்றி மூக்கை தொடுவோம் என சீரியல் மோடுக்கு கொண்டு சென்று சில எபிசோடுகளில் பொறுமையை ரொம்பவே சோதித்து விடுகின்றனர். ஆரம்பத்திலேயே திரிபுவன் யாரு தெரியுமா? என்கிற பில்டப்பை கொடுக்கவே ஒரு எபிசோடை வீணடிப்பது வேண்டாத வேலை. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸில் உள்ள இந்த வெப்சீரிஸை குடும்பத்துடன் பார்க்க முடியாது. ஆனால், பணத்தேவைக்காக சிலர் இப்படியும் மாறும் காலம் வந்து விட்டது என்கிற எச்சரிக்கை மணியாக மட்டும் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X