மகளை கட்டித்தரேன்னு சொல்ற ராஜா.. அவரோட மனைவியை தூக்கிட்டுப் போகும் இளவரசன்.. இப்படியொரு வெப்சீரிஸ்!

சென்னை: 2004ம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலியின் கணவரும் பிரபல ஹாலிவுட் நடிகரும் நடித்த டிராய் திரைப்படத்தை உலகளவில் பல ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். கிரேக்க கதையான டிராய் சாம்ராஜ்யம் எப்படி அழிந்தது என்பதை மையமாக வைத்தே அந்த படம் உருவாகியிருக்கும்.

அதே கதையை வைத்து Troy: Fall of a City எனும் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏகப்பட்ட ரசிகர்களை சர்வதேச அளவில் இந்த வெப்சீரிஸ் கவர்ந்திருக்கிறது. அதற்கு காரணமே அதன் கதையும் நெட்பிளிக்ஸ் வெப்சீரிஸ் என்றால் சொல்லவே தேவையில்லை அதில் காட்டப்படும் ஏகப்பட்ட சதையும் தான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வெப்சீரிஸ் பற்றிய ஒரு சிறு அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..

Troy: Fall of City web series review in Tamil

டிராய் சாம்ராஜ்யத்தின் அழிவு: இயக்குநர் டேவிட் ஃபர் இயக்கத்தில் பெல்லா டெய்னே, லூயிஸ் ஹண்டர், டேவிட் த்ரெஃபால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சக்கைப் போடு போட்டு வருகிறது. டிராய் படமே ரசிகர்களின் ஃபேவரைட் என்பதால் அதன் பெயரில் உருவாகி உள்ள இந்த வெப்சீரிஸ் எப்படி இருக்கு என பார்க்க ஆரம்பித்தாலே போதும் 8 எபிசோடுகளை ஒரே மூச்சில் ரசிகர்கள் பார்த்து விடுவார்கள். அந்தளவுக்கு கடைசி வரை என்ன நடக்கப் போகுது என்கிற விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது.

என்ன கதை: சிறுவயதிலேயே இந்த குழந்தை பிறந்தது நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தும் ஒரே கருப்பு ரத்த ஆறு ஓடும் என அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறக்கும் போது அந்த அம்மாவின் 7 வயது மகள் சிண்ட்ரெல்லா கனவு காண்கிறாள். குருமார் ஒருவரும் அதே சொல்ல, அந்த குழந்தையை கொன்று விட முடிவு செய்கின்றனர்.

பல வருடங்களுக்கு பிறகு கோட்டைக்கு வெளியே சாமனியனாக பாரிஸ் வளர்ந்து வருகிறான். ஒருநாள் அவனுக்கு சில கடவுள்கள் தங்க ஆப்பிள் போன்ற ஒரு பொருளை எடுக்கச் சொல்ல, அதை தன்னிடம் கொடு என 3 பெண் தேவதைகள் கேட்கின்றன. அதில், ஒரு பெண் தேவதைக்கு அந்த பழத்தை ஹீரோ கொடுக்கிறான். உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்க, உலகிலேயே அழகான பெண் வேண்டும் என்று மட்டும் கேட்கிறான். அது கிடைக்கும் என சொல்லி அவர்கள் மறைந்து விடுகின்றனர்.

சரஸ்வதி சபதம் படத்தை போல பழத்தை தங்களுக்கு தராத மற்ற இரண்டு தேவதைகள் ராட்சசியாக மாறி அவன் வாழ்க்கையை நரகமாக்குகிறோம் என முடிவெடுக்கின்றனர். இறுதியில் அந்த பெண்ணை அவன் சந்தித்தானா? இல்லையா? அந்த பெண் கிடைத்த பிறகு அவனுடைய வாழ்க்கை என்ன ஆனது? என்கிற வகையில் படத்தில் வந்த டிராய் கதைக்கும் வெப்சீரிஸ் கதைக்கும் நிறைய மாறுதல்களை செய்து விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார் இயக்குநர்.

Troy: Fall of City web series review in Tamil

மகளுக்கு பதில் அம்மா மீது ஆசை: அந்த தேவதைகள் மறைந்த பின்னர் கோட்டைக்குள் செல்ல முயல்கிறான் பாரிஸ். அங்கே அவனுக்கும் மன்னரின் மகனுக்கும் துவந்த யுத்தம் நடக்கிறது. அதில், மன்னனின் மகன் பாரிஸை கொல்லப் போகும் சூழ்நிலையில், இதுவரை பாரிஸை வளர்த்த தந்தை மன்னருக்கு சிக்னல் காட்டியதும் தனது மகன் கொல்லப்படாமல் ஊருக்கு வெளியே வளர்ந்து வந்ததை அறிகிறான். உடனே சண்டையை நிறுத்தி தனது மகனை காப்பாற்றுகிறான். குழந்தையா இருக்கும் போதே ஓநாய் தூக்கிட்டு போய் விட்டது என வேறு கதையை சொல்லி அலெக்ஸாண்டர் என புதிய பெயரை வைத்து இளவரசனாக அறிவிக்கிறார். மேலும், பக்கத்து நாட்டுக்குச் சென்று அவருடைய நட்பை பெற்று வர வேண்டும் என புதிய இளவரசனான ஹீரோவுக்கு கட்டளை போடப்படுகிறது.

அங்கே செல்லும் இளவரசனை அரசனும் அரசியும் வரவேற்கின்றனர். அரசியை பார்த்ததில் இருந்தே அந்த தேவதை சொன்ன பெண் இவள் தான் என நினைத்து அவளை இச்சையோடு பார்க்க ஆரம்பிக்கிறான். என்னுடைய மகளை திருமணம் செய்துக் கொள்ளுங்கள் என அரசன் சொல்ல அதற்கு பதிலாக அவர் இல்லாத நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டு அவருடைய காதலையும் பெற்று தனது நாட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான்.

Troy: Fall of City web series review in Tamil

பெண்ணால் நிகழும் போர்: தந்தையின் மரணத்திற்காக அவசர அவசரமாக சென்ற அந்த நாட்டின் அரசன் திரும்பி வந்து பார்த்ததும் மனைவியை அலெக்ஸாண்டர் அழைத்துக் கொண்டு சென்றதை அறிந்து கோபத்துடன் தனது சகோதரர்களின் உதவியை நாடி பெரிய படையை திரட்டி போருக்கு வருகிறான். இரு நாட்டுக்கும் நடக்கும் போரை நிறுத்த சண்டை போடாமல் இருந்தால் உன்னுடன் வருகிறேன் என ஓடிவந்த மனைவி தூது சொல்ல, படைகளை திருப்பி அனுப்பி விட்டு டிராய் படத்துக்கே உரித்தான அந்த மரக்குதிரை பொம்மைக்குள் ஆட்கள் ஒளிந்திருந்து போர் முடிந்து விட்டது என கும்மாளம் போடும் போது கோட்டைக்குள் பெரும் படையுடன் புகுந்து அனைவரையும் கொன்று குவிக்கின்றனர்.

பாரிஸாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஹீரோ அலெக்ஸாண்டராக மாறிய பின்னர் உலகிலேயே அழகான பெண் கிடைத்த நிலையில், அந்த பெண்ணாலே தானும் தனது சாம்ராஜ்யத்தையும் அழித்துக் கொண்ட கதையாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வெப்சீரிஸ் 8 எபிசோடுகளாக உள்ளது. அடல்ட் காட்சிகள் அதிகம் இருந்தாலும் அதை தாண்டிய கிரேக்க கதையாக இந்த வெப்சீரிஸ் மிரட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X