Don't Miss!
- News
சென்னைக்கு பாராட்டு.. அதிகாரிக்கு ஆபாச திட்டு.. சிக்கலில் பீகார் ஐஏஎஸ் அதிகாரி கேகே பதாக்.. வீடியோ
- Sports
30 மீட்டர் வரை பறந்த பைல்ஸ்.. தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக்.. தீயாக பரவும் வீடியோ
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சொந்தக்காரங்க என்னை ஆபாச நடிகைன்னு தான் கூப்பிடுறாங்க; கண்ணீர் வடித்த பிக் பாஸ் பிரபலம்
மும்பை: பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் தனது கஷ்ட காலத்தில் தன் குடும்பமே தனக்கு துணையாக இல்லை என்கிற அதிர்ச்சிகரமான ரகசியத்தை போட்டு உடைத்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழில் பாலாஜி முருகதாஸ் தனது பெற்றோர் குறித்து பேசியது மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.
பல கண்டிஷன்களை போட்ட ராஷ்மிகா மந்தனா.. கடுப்பான ஷங்கர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
அதே போலத்தான் தற்போது இந்தி பிக் பாஸ் ஒடிடியில் கலந்து கொண்ட உர்ஃபி ஜாவேத்தும் அப்பா தன்னை அடித்தது பற்றியும் சொந்தக்காரங்க தன்னை ஆபாச நடிகை என அழைத்தனர் என்றும் கூறி கண்ணீர் மல்க வடமாநில மீடியா ஒன்றுக்கு பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் ஒடிடி
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து Voot ஒடிடி தளத்தில் பிக் பாஸ் ஒடிடி நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 13 போட்டியாளர்களுடன் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

முதல் எலிமினேஷன்
இந்தி டிவி சீரியல் நடிகை உர்ஃபி ஜாவேத் முதல் நபராக பிக் பாஸ் ஒடிடி வீட்டில் இருந்து 8வது நாளிலேயே வெளியேறி உள்ளார். இந்நிலையில், அவர் அளித்துள்ள அதிர்ச்சிகரமான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆபாச நடிகையா பார்த்தாங்க
பிக் பாஸ் ஒடிடி வீட்டில் இருந்து முதல் நபராக வெளியே வந்துள்ள டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் ஏகப்பட்ட பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனக்கு ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவம் காரணமாக தனது சொந்தக்காரங்களே தன்னை ஆபாச நடிகையாக பார்த்தனர் என்றும் சிலர் இன்னமும் தன்னை Porn Star என்றே அழைப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டுள்ளார்.

ஏன் அப்படி
நான் கல்லூரி படிப்பை கூட ஆரம்பிக்கவில்லை. வெறும் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது புகைப்படத்தை மார்ஃப் செய்து ஆபாச வெப்சைட்களில் சிலர் பதிவிட்டு விட்டனர். அதனை பார்த்த குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட் பண்ணாமல் என் மீது சந்தேகப்பட்டனர் என மனம் குமுறியுள்ளார்.

அப்பா அடிச்சு கொன்னுட்டாரு
என் பெற்றோர்களும் அந்த இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை. என் அப்பா என்னை நம்பாமல் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு விட்டு என்னை அடிச்சே கொன்னுட்டாரு என்றும் நடிகை உர்ஃபி ஜாவேத் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வங்கி கணக்கை சோதித்தனர்
அதுமட்டுமின்றி, என்னோட வங்கி கணக்கில் கோடி கோடியாய் பணம் கொட்டிக் கிடக்கும் என்று சொந்தக்காரங்க எல்லாம் என்னோட வங்கி கணக்கு முதற் கொண்டு சோதனை செய்தார்கள். அதன் பிறகு 2 ஆண்டுகள் என்னால் வெளியே தலை காட்ட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தேன். பின்னர் தான் மீடியா பக்கம் என் பார்வை திரும்பி டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போ இந்த மேடையில் இருந்து சீக்கிரமே வெளியேறினாலும் நிச்சயம் இந்த துறையில் என்னால் சாதிக்க முடியும் என்று கூறியுள்ள அவர், தனக்கு நேர்ந்ததை போல எந்தவொரு பெண்ணுக்கும் கொடுமை நேரக் கூடாது என்றும் கூறியுள்ளார்.