GOAT OTT: ஓடிடியில் வெளியான தளபதியின் கோட்.. டைரக்டர்ஸ் கட் வந்துச்சா.. இல்லையா?
சென்னை: தளபதி விஜய், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி முழுக்க முழுக்க அரசியலில் பயணிக்கவுள்ளார். இதனால் இவரது கடைசி இரண்டாவது படமாக கோட் படம் அமைந்தது. இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படம் வெளியானது யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. படம் தியேட்டர்களில் நல்ல வசூலைக் குவித்த நிலையில், இன்று அதாவது செப்டம்பர் 3ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.
கோட் படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் நடைபெற்ற புரோமோசன் வேலைகளின்போது, கோட் படத்தின் பட்ஜெட் ரூபாய் 386 கோடிகள் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியிருந்தார். இந்த பட்ஜெட்டில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி எனவும் அவரே கூறியிருதார். மேலும் இது இல்லாமல், படத்தின் புரோமோசன் வேலைகளுக்கென தனியாக சில கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தது மட்டும் இல்லாமல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்தனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடினார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். இவர்கள் மட்டும் இல்லாமல், விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி உருவாக்கப்படது.

விஜயகாந்த், த்ரிஷா, சிவகார்த்திகேயன் காட்சிகளுக்கு தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், படம் முழுக்க ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஆகியோரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு வெளியிட்ட பாடல்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல் என்றால், அது மட்ட பாடல் மட்டும்தான். மற்ற பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் தியேட்டரில் அனைத்து பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரிலீஸ்: படம் கடந்த மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் ஒரு மாதத்தில் ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில், விஜய்யின் ஹை பட்ஜெட் படமும் ஒருமாதத்தில் அதாவது படம் தியேட்டரில் வெளியாகி நான்கு வாரத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசூல்: மேலும் படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகள் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டும் இல்லாமல் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 200 கோடிகளை அள்ளி வசூல் சாதனை படைத்ததாக படக்குழு தெரிவித்தது. அதேபோல், வசூலாக மட்டும் இல்லாமல், தியேட்டரில் ஷேர் மட்டும் கோட் படம் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் அள்ளிக் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். படம் மொத்தத்தில் பிரமாண்டமான வசூல் வெற்றியைக் கொடுத்துள்ளது.

ஓடிடி : இந்நிலையில் படம் இன்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் 3 மணி நேரம் ஒரு நிமிடம். இதுதான் தற்போது நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. மேலும் நெட் ஃபிளிக்ஸில் டைரக்டர்ஸ் கட் வெர்ஷன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது வெளியாகவில்லை. படத்தினை தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் தொடங்கி, படத்தினை இன்னொருமுறை பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்கள் வரை அனைவருக்கும் கோட் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications











